இதே நாளில் அன்று

பிப்ரவரி 17: திருநெல்வேலி மாவட்டம், சிக்கநரசய்யன் கிராமத்தில், சரவணப்பெருமாள் பிள்ளை -- பாப்பம்மாள் தம்பதிக்கு மகனாக, 1891, அக்டோபர் 12ல் பிறந்தவர் வையாபுரி பிள்ளை.

இவர், பாளையங்கோட்டை புனித சவேரியார் பள்ளி, திருநெல்வேலி ஹிந்து கல்லுாரி, சென்னை கிறிஸ்துவ கல்லுாரியில் படித்தார். திருவனந்தபுரம் சட்ட கல்லுாரியில் சட்டம் படித்து, வழக்கறிஞர் ஆனார்.

ஓலைச்சுவடிகளில் இருந்த பழந்தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து, கால நிர்ணயம் செய்து, உரையுடன் பதிப்பித்தார். சென்னை பல்கலை உருவாக்கிய, தமிழ் அகராதியின் பதிப்பாசிரியராக பணியாற்றினார்.

கடந்த, 1936ல், சென்னை பல்கலையின் தமிழாய்வு துறை தலைவராகி, ஆய்வாளர்களை உருவாக்கினார். சமஸ்கிருதம், மலையாளம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளில் புலமை பெற்ற இவர், மொழி ஒப்பீட்டாய்வு கட்டுரைகளையும் எழுதியுள்ளார். ரசிகமணி டி.கே.சி.,யுடன் சேர்ந்து, நெல்லை கம்பன் கழகத்தை உருவாக்கிய இவர், தன், 65வது வயதில், 1956ல், இதே நாளில் மறைந்தார்.

இவரது நினைவு தினம் இன்று!

Advertisement