வேளாண் துறைக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல்; மக்காச்சோள சாகுபடி உயர்வு
நமது நிருபர்
2026-2027ம் நிதியாண்டுக்கான வேளாண் இடைக்கால பட்ஜெட்டை, தமிழக சட்டசபையில் அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
அதன் விபரம் பின்வருமாறு:
* இளைஞர்களை வேளாண் தொழில்முனைவோராக்க ரூ.4.5 கோடி மானியம் வழங்கப்பட்டு உள்ளது.
* முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், ரூ.178 கோடியில்
21,35,000 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.
* தமிழகத்தில் 4,150 சோலார் பம்புசெட்டுகள் நிறுவப்பட்டுள்ளது.
* மக்காச்சோளம் உற்பத்தி ஏக்கர் 10 லட்சத்திலிருந்து 12 லட்சமாக அதிகரித்துள்ளது. ரூ.78 கோடியில் மக்காச்சோள உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டத்தால், 1.50 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.
* 14 லட்சம் ஏக்கரில் ரூ.229 கோடியில் எண்ணெய்வித்துப் பயிர்களின் சாகுபடி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், 7.54 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.
* விவசாயிகளுக்கு 2 லட்சம் புதிய மின் இணைப்புகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
* வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ், 5 ஆண்டுகளில் 77,499 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. 1,320 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் நிறுவப்பட்டன.
* நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் கோவையில் தொடங்கப்பட்டுள்ளது.
* தமிழகத்தின் வரலாற்றில் முதன்முறையாக வேளாண்மைக்கென தனி பட்ஜெட் 2021-22ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஐந்து வேளாண்மை பட்ஜெட்டில் ரூ.1,94,076 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
* முக்கனிகள் சாகுபடி பரப்பு விரிவாக்கம் மூலம் 39,000 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.
* தமிழகத்தில் மரவள்ளி கிழங்கு, மல்லி உற்பத்தியில் முதலிடத்திலும், கொய்யா உற்பத்தியில் 2வது இடத்திலும் உள்ளது. விவசாயிகளிடம் 5 ஆண்டுகளில் 186 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.
* 20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
* அனைத்து கிராமங்களிலும் வேளாண் வளர்ச்சி அடைய கருணாநிதி வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 10,000 சிறுபாசன குளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் வேளாண் காடுகள் கொள்கை வெளியிடப்பட உள்ளது.
* ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு 70% மானியம் வழங்கப்பட்டு உள்ளது. 17,340 ஆதி திராவிடர் பழங்குடியினர் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.
* நுண்ணீர்ப்பாசன திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம் வழங்கப்பட்டு உள்ளது. 5,13,000 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.
* பசுமைக்குடில், நிழல்வலைக் குடில் சாகுபடி ரூ.91 கோடியில் 23,55,000 சதுர மீட்டரில் ஊக்குவிக்கப்பட்டுள்ளது.
* சுவைதாளிதப் பயிர்களான மிளகாய், மஞ்சள், மிளகு, ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய் ஆகியவற்றின் சாகுபடி பரப்பு விரிவாக்கம் செய்யப்பட்டதால் 29,855 விவசாயிகள் பயன் அடைந்துள்ளன.
* சென்னை, கோவையில் 4 புதிய உணவு பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
* கணவரை இழந்த பெண்கள் வருவாய் ஈட்ட, வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வளர்க்க 100% மானியம் வழங்கப்பட்டுள்ளது.
* விண்ணப்பிக்கப்பட்ட 41 விளை பொருட்களில் சோழவந்தான் வெற்றிலை, பண்ரூட்டி பலா, முந்திரி, விருதுநகர் சம்பா வத்தல், ராமநாதபுரம் சித்திரைக்கார் அரிசி, புளியங்குடி எலுமிச்சை, செட்டிக்குளம் சின்ன வெங்காயம், தூயமல்லி அரிசி, கவுந்தப்பாடி நாட்டுச்சர்க்கரை ஆகிய 9 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
* தக்காளி, வெண்டை, கத்திரியை 1 லட்சம் ஹெக்டேரில் விரிவாக்கம் செய்ய 1.68 லட்சம் விவசாயிகளுக்கு மானியம் அளிக்கப்பட்டு உள்ளது.
* 5 ஆண்டில் இயற்கை பேரிடர்களுக்கு ரூ.2,045 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது.
* வேளாண் கல்வி, கல்லூரிகளுக்கு ரூ.3,065 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
* நீர்வளத்துறை மூலம், அணைகளின் ஆயக்கட்டுப் பகுதிகளில் ரூ.498 கோடி செலவில் 4,580 தூர்வாரும் பணிகள்.
இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.
@block_P@
வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அவையில் பட்ஜெட் வாசிக்கும் போதும் அவர் மற்றும் சட்டசபை எம்எல்ஏக்கள் பச்சை நிறத் துண்டு அணிந்து இருந்தனர்.block_P
கொள்முதலான தானியங்களை சேகரிக்க பாதியளவு கூட கிடங்குகள் இல்லை. தானிய உற்பத்தியைப் பெருக்கிவிட்டதாக ஸ்டிக்கர் தேவையா,?
தமிழக மண்ணில் கம்பு கேப்பை சோளம். பல நாடுகளில் விளையும் மக்கா சோளம் போட்டி போட முடியுமா? முன்பு வெள்ளை தங்கம் பருத்தி சாகுபடி இருந்தது. பாமாயில் அதிக இறக்குமதி தமிழகம்? ஆனால் , பனை, தென்னை, வாழை மர, ஆடு மாடு வளர்ப்பில் ஆர்வம் குறைவு? விவசாய நில, நீர் தேவை பூர்த்தி செய்ய வேண்டும். விளை பொருள் தற்காலிக, நிரந்தர நவீன சேமிப்பு கிடங்கு அவசியம். சிலர் உச்சி வெயிலில் சாலை ஓர மரங்களுக்கு நீர் பாய்ச்சி வருவதை பார்க்க முடியும். வெயில் நேரத்தில் விவசாய மின் இணைப்பு துண்டிக்க வேண்டும். விவசாயம் மிக பெரிய கூட்டுறவு தொழில். உழுபவருக்கு நிலம் சொந்தம் என்று திராவிடம் செய்த மோசடி எத்தனை ஏக்கர் நிலம்? தானியம் யாருக்கு சொந்தம்?
மக்காசோளம் 2500இருந்து 1700ரூ வந்து விட்டது இதற்கு என்ன தீர்வுமேலும்
-
குஜராத், தமிழகத்தில் பல நீதிமன்றங்களுக்கு இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் சோதனை
-
விலையில்லா சைக்கிள் வீண்: மலை பகுதிக்கு மாற்று திட்டம் தேவை
-
சிவராத்திரி விழா; பாதக்கொரடு அணிந்து ஊர்வலம்
-
நகை அடகுக்கடை ஷட்டர் உடைப்பு: 40 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி கொள்ளை
-
'பள்ளமில்லா சாலை' திட்டம்: முழுமையான பலன் இல்லை
-
'நீட்' தேர்வுக்கு பின் பிளஸ் 2 ரிசல்ட்: மாணவர்கள் நிம்மதி