தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்தது; 2 நாட்களில் ரூ.1,920 சரிவு
சென்னை: சென்னையில் இன்று (பிப்ரவரி 17) தங்கம் விலை சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச நிலவரங்களால் நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலைகள் ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 14) ஆபரண தங்கம் கிராம், 14,560 ரூபாய்க்கும், சவரன், 1,16,480 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 280 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஞாயிற்று கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை.
நேற்று (பிப்ரவரி 16) தங்கம் விலை கிராமுக்கு, 120 ரூபாய் குறைந்து, 14,440 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 960 ரூபாய் சரிவடைந்து, 1,15,520 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து, 265 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு 15,000 ரூபாய் சரிவடைந்து, 2.65 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (பிப்ரவரி 17) தங்கம் விலை சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 1,920 ரூபாய் குறைந்துள்ளது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
யார் இந்த விலைக்கு வாங்குவார்கள்? வேடிக்கை பார்ப்பார்கள்.
தேவை இல்லாத செய்திமேலும்
-
குஜராத், தமிழகத்தில் பல நீதிமன்றங்களுக்கு இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் சோதனை
-
விலையில்லா சைக்கிள் வீண்: மலை பகுதிக்கு மாற்று திட்டம் தேவை
-
சிவராத்திரி விழா; பாதக்கொரடு அணிந்து ஊர்வலம்
-
நகை அடகுக்கடை ஷட்டர் உடைப்பு: 40 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி கொள்ளை
-
'பள்ளமில்லா சாலை' திட்டம்: முழுமையான பலன் இல்லை
-
'நீட்' தேர்வுக்கு பின் பிளஸ் 2 ரிசல்ட்: மாணவர்கள் நிம்மதி