புறநானுாறு பாடல் எழுதும் போட்டி 

சிவகங்கை: சிவகங்கையில் தமிழ்சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான புறநானுாறு பாடல் எழுதும் போட்டி நடைபெற்றது.

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு சிவகங்கையில் தமிழ் சங்கம் சார்பில் 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர் களுக்கு புறநானுாறு பாடல் எழுதும் போட்டி நடந்தது.

தமிழ் சங்க தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார். சங்க செயலாளர் பாண்டியராஜன், முன்னாள் பொருளாளர் குமார், நிர்வாக குழு மரியசெல்வி போட்டியை ஒருங் கிணைத்தனர்.

வெற்றி பெறும் மாணவர்களுக்கும், பங்கேற்ற அனைவருக்கும் உலக தாய்மொழி தின விழாவில் பரிசு, பாராட்டு சான்று வழங்கப்படும்.

Advertisement