எம்ஜிஆர் நடித்த இதயக்கனி: தியேட்டரில் பார்த்து ரசித்த இபிஎஸ்

2


சென்னை : “சினிமாவில் நடித்துவிட்டு, தன்னை எம்.ஜி.ஆராக சிலர் கனவு காண்கின்றனர்” என த.வெ.க., தலைவர் விஜயை, அ.தி.மு.க., பொதுச்செயலர் இபிஎஸ் மறைமுகமாக தாக்கினார்.


சென்னையில், 'ஆல்பர்ட்' தியேட்டரில், எம்.ஜி.ஆர்., நடித்த இதயக்கனி படம், ரீ ரிலீஸ் ஆனது. அதை, அ.தி.மு.க., நிர்வாகிகளோடு, இபிஎஸ் கண்டு ரசித்தார்.


இது குறித்து, அவர் பேசியதாவது: எம்.ஜி.ஆர்., படங்கள் ரீரிலீஸ் செய்யப்பட்டாலும், 'பிளாக்பஸ்டர் ஹிட்' அடிக்கிறது. சினிமாவில் அரசியலை புகுத்தி, வெற்றி பெற்றவர்களில் எம்.ஜி.ஆரும் ஒருவர். சினிமாவில் நிஜமாகவே, உச்சத்தில் இருந்தபோது, அரசியலுக்கு வந்தவர். தனது படங்களில் புகைப்பது, மது குடிப்பது போன்ற காட்சிகளை தவிர்த்தார்.
ஆனால், தற்போது சிலர், சினிமாவில் நடித்துவிட்டு, தன்னை எம்.ஜி.ஆராக நினைக்கின்றனர். அதையே கனவாகவும் காண்கின்றனர். அக்கனவு ஒருபோதும் பலிக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement