குறைதீர் கூட்ட அரங்கம் அதிகாரிகள் வராததால் வெறிச்சோடியது சிவகங்கையில் மனுக்களுடன் வந்தோர் ஏமாற்றம்

சிவகங்கை: வாரத்திற்கு ஒரு நாள் குறைகளை தீர்த்து வைக்க கோரி மனுவுடன் வரும் மக்களிடம் மனுக்களை வாங்க கூட சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் இன்றி நேற்று ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற் பட்டது.

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் பொற்கொடி தலைமை யில் வாரம் தோறும் திங்களன்று பொது குறைதீர் கூட்டம் நடைபெறும்.

இக்குறைதீர் கூட் டத்தில் கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் உட்பட அனைத்து துறை மாவட்ட அதி காரிகள், பிற அலுவலர்கள் பங்கேற்று, மக்கள் கலெக்டரிடம் நேரடியாக தரும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாரந்தோறும் திங்கள் அன்று கலெக்டரை சந்தித்து 700 முதல் 900 பேர் வரை மனுக்களை அளிக்கின்றனர். குறைதீர் கூட்டத்தில் மக்கள் வழங்கும் மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டு, அதன்நடவடிக்கையை அக் குறைதீர் கூட்டத்திலேயே கலெக்டர் கேட்டு மேல் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்ய வேண்டும். ஆனால் கடந்த சில மாதங்களாக மாவட்ட வருவாய் அலுவலர் தான் மனுக்களை பெறுகிறார்.

விவசாய குறைதீர் கூட்டம் இல்லை: அதே போன்று மாதத்தில் ஒரு வெள்ளியன்று விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை நடத்தி, கலெக்டரே விவசாயிகள் கூறும் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், கடந்த சில மாதங்களாக வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியை காரணமாக வைத்து, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தையே சிவகங்கையில் நடத்தவில்லை.

இது போன்று தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து மனுவுடன் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள், விவ சாயிகள் பெரும்பாலும் ஏமாற்றத்தை தான் சந்தித்து செல்கின்றனர்.

Advertisement