தாழையூர் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

தேவகோட்டை: தாழையூர் கூத்தாடி முத்து பெரிய நாயகி அம்மன் கோயில் சிவராத்திரியை முன்னிட்டு நேற்று தீ மிதித்தல் விழா நடந்தது.

உசிலையுடைய அய்யனார் மற்றும் கூத்தாடி முத்து பெரிய நாயகி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தானா வயல், வளங்காவயல், தாழையூர், இறகுசேரி கிராம பகுதிகளில் இருந்து பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து வந்து பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கண்டதேவி தேரடி கருப்பர் கோயிலில் நடந்த அபிஷேகம் அலங்கார பூஜைகளை தொடர்ந்து சாமியாட்டம் நடை பெற்றது.

நேற்று மாலை இறகு சேரி சுடலைமாடன் கோயிலில் இருந்து சுடலைமாடன் மயானம் சென்று பூஜை செய்து கோயில் திரும்பிய பிறகு பூஜைகள் நடந்தன.

இருமதி பாலாருடைய அய்யனார், காளியம்மன் கோயில் நேற்று பக்தர்கள் பால்குடம், காவடிகள் எடுத்து வந்து பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

Advertisement