மகளிர் உரிமைத் தொகை எடுக்க வங்கியில் குவிந்த பெண்கள்

மானாமதுரை: மானாமதுரையில் மகளிர் உரிமைத் தொகையை கூட்டுறவு வங்கியில் எடுப்பதற்காக அதிகமான பெண்கள் கூடியதால் வங்கி கதவை மூடியதைத் தொடர்ந்து தள்ளுமுள்ளு, வாக்கு வாதம் ஏற்பட்டது.

அரசு சார்பில் பிப். 13ம் தேதி மாதம்தோறும் வழங்கக்கூடிய மகளிர் உரிமை தொகையை பிப்., மார்ச், ஏப்.,ஆகிய 3 மாதங்களுக்கும் முன்னதாகவே 3 ஆயிரமும், கோடைகால சிறப்பு நிதியாக ரூ.2 ஆயிரமும் சேர்த்து ரூ.5 ஆயிரம் பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைத்தனர். அனைத்து வங்கிகளிலும் பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மானாமதுரை-சிவகங்கை ரோட்டில் உள்ள சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் ஏராளமான பெண்கள் நேற்று குவிந்த னர். வங்கி ஊழியர்கள் முன்பக்க கதவை மூடியதால் சிறிது நேரம் பெண்களுக்கும் வங்கி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதோடு தள்ளு முள்ளு ஏற்பட்டது. வங்கி அதி காரிகள் நடவடிக்கை எடுத்து ஒருவர் பின் ஒருவராக சென்று பணத்தை பெற்று சென்றனர்.

Advertisement