டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்; சென்னையில் சத்துணவு ஊழியர்கள் கைது

2

சென்னை: தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின், மதுக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 'டாஸ்மாக்' தொழிற்சங்கங்களின் போராட்ட குழுவினர், சென்னை எழும்பூரில், இம்மாதம், 1ம் தேதி முதல், தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


நேற்று, அனைத்து மாவட்ட மேலாளர் அலுவலகம் முன், வாயில் கூட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊராட்சி செயலர்கள்




த மிழக அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தில், ஊராட்சி செயலர்களை இணைக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத்தினர், 13வது நாளாக நேற்றும், சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை அருகே நடந்த தர்ணா போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.


உள்ளாட்சித் துறை ஊழியர்கள்




த மிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில், 'பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று, சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே, 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.


சத்துணவு ஊழியர்கள்




த மிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட, 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள், நேற்று 14ம் நாளாக, மாவட்டத் தலைநகர் மற்றும் கலெக்டர் அலுவலகம் முன், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, சிவானந்தா சாலை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.


வாணிப கழக கணினி பணியாளர்




த மிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்களை, இந்திய உணவு கழகம் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து, உணவுத் துறையின் கீழ் செயல்படும், தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்கிறது. இதில், 17 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் கணக்காளர்கள், கணினி மேற்பார்வையாளர்கள், கணினி பதிவாளர்கள் ஆகியோருக்கு நிர்வாகமே நேரடி ஊதியம் வழங்குதல், உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நுகர்பொருள் வாணிப கழக கணினி பணியாளர் சங்கத்தினர், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


மாற்றுத்திறனாளிகள்




த மிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உட்பட, நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் போராட்டம் நடந்து வருகிறது. நேற்று ஐந்தாம் நாளாக, சென்னை சிவானந்தா சாலையில் நடந்த தர்ணா போராட்டத்தில் பங்கேற்ற நுாற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.



மின் வாரிய ஊழியர்கள்




தி .மு.கவின் தேர்தல் வாக்குறுதியானங 153ஐ, நிறைவேற்ற வலியுறுத்தி, சென்னை, அண்ணா சாலையில் உள்ள தலைமை மின்வாரியம் அலுவலகம் அருகே தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர், நேற்று காலவரையற்ற தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கவுரவ விரிவுரையாளர்கள்



த மி ழ்நாடு அரசு கல்லுாரிகள், கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில், பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவின்படி, 57,000 ரூபாய் சம்பள உயர்வு வேண்டும் என்பது உட்பட, ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பணி புறக்கணிப்பு, போராட்டம் நடந்தது.


சென்னை சைதாப்பேட்டையில் உள்ள, கல்லுாரி கல்வி இயக்கக வளாகத்தில், ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கவுரவ விரிவுரையாளர் கூட்ட மைப்பினர், நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



@block_Y@

வாழ்வாதார இயக்க பணியாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு



த மிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தி ன், அனைத்து பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 2ம் தேதி முதல், சென்னையில் போராட்டம் நடந்து வந்தது.


நேற்று 14ம் நாளாக, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தில், 100க்கும் மேற்ப்பட்ட பணியாளர்கள், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, போராட்டத்தில் ஈடுபட்டோருடன் பேச்சு நடத்தினார்.


அதன்பின், சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜெகதீஸ்வரி கூறுகையில், ''ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி செயலர் ககன்தீப் சிங் பேடியை, நேரில் சந்தித்து எங்களின் கோரிக்கைகளை தெரிவித்தோம். அப்போது நடந்த பேச்சில் உடன்பாடு ஏற்பட்டது. இதனால், எங்களின் போராட்டத்தை, தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளோம்,'' என்றார்.block_Y

@block_P@

ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்



தமிழ்நாடு ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலர் ஜாஹிர் ஹூசேன் வெளியிட்ட அறிக்கை:


ஆட்டோ கட்டணம் உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைள் குறித்து, நாங்கள் போராட்டங்களை நடத்தி வந்தோம். இந்நிலையில், போக்குவரத்து துறை, துணை ஆணையர் யுவராஜ், தொழிற்சங்க நிர்வாகிகள் நடத்திய பேச்சில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதாவது, 'ஆட்டோக்களில் விதிகளுக்கு மாறாக, சரக்குகளை ஏற்றக் கூடாது' என, தனியார் நிறுவனங்களுக்கு, போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


சொந்த பயன்பாட்டு வாகனங்களை, வாடகைக்கு பயன்படுத்தினால், நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்துள்ளது. ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைப்பது உள்ளிட்ட இதர கோரிக்கைகள் குறித்து, இன்று போக்குவரத்துத் துறை ஆணையர் முன்னிலையில், விரிவான பேச்சு நடக்க உள்ளது.


இந்த வாக்குறுதிகளை ஏற்று, போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் நடத்த இருந்த, 'பர்மிட்' ஒப்படைப்பு போராட்டத்தை, தற்காலிகமாக கைவிடுகிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.block_P

Advertisement