சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீராமகிருஷ்ணா புரிந்துணர்வு

கோவை: பச்சாபாளையம், ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரி மற்றும் சிங்கப்பூரின், மேனேஜ்மென்ட் டெவலப்மென்ட் இன்ஸ்டிட்யூட் ஆப் சிங்கப்பூர் (எம்.டி.ஐ.எஸ்.,) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. நிகழ்விற்கு எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளையின் மேலாண்மை அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார்.

இதன் வாயிலாக, செயற்கை நுண்ணறிவு மற்றும் இணையபாதுகாப்பு துறைகளில் எம்.டி.ஐ.எஸ்., முதுநிலை டிப்ளமோ பாடநெறிகள் ராமிகிருஷ்ணா கல்லுாரியில் தொடங்கப்படுகின்றன.

இப்பாடநெறிகள் மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு சிறந்த வேலைவாய்ப்புகளை வழங்கும்.

எம்.டி.ஐ.எஸ்., தலைமைச் செயலாளர் ஷரீப் அப்துல் ஜப்பார், ஆட்சேர்ப்புத் தலைவர் அருண் அங்கேவிடில், துணைத்தலைவர் ரோஜர்தாம் காங்குவான் மற்றும் முதல்வர், பேராசிரியர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Advertisement