ஆன்லைன் ஏலச் செயலி மூலம் பண மோசடி: நடிகர் ஜெயசூர்யாவின் ரூ.39 லட்சம் சொத்துக்கள் முடக்கம்

கொச்சி: பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், மலையாள நடிகர் ஜெயசூர்யாவுக்கு சொந்தமான ரூ.39.01 லட்சம் மதிப்பிலான அசையாச் சொத்துக்களை அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கியுள்ளது.

'சேவ் பாக்ஸ்' என்ற ஆன்லைன் ஏலச் செயலி மூலம் மின்னணு உபகரணங்களை ஏலம் விடுவதாகவும், அதிக லாபம் பெறலாம் என்று கூறி, பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்த நிறுவனத்தின் மீது புகார் எழுந்தது. இந்த செயலியின் பிராண்ட் அம்பாசிடராக ஜெயசூர்யா இருந்தார். இதற்கு அவருக்கு ரூ.1 கோடி ஊதியம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த ஊதியத்தொகை அவருக்கும் அவரது மனைவி சரிதாவுக்கும் சொந்தமான வங்கி கணக்குகளில் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது.
புகாரின் அடிப்படையில்,திருச்சூர் கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் பதிவு செய்யப்பட்ட பல எப்.ஐ.ஆர்களின் அடிப்படையில் இந்த பணமோசடி விசாரணையை அமலாக்கத்துறை தொடங்கியது.


இந்த வழக்கு தொடர்பாக கடந்த டிசம்பர் 2025-ல் ஜெயசூர்யா மற்றும் அவரது மனைவியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.அதன் தொடர்ச்சியாக,அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதில் இந்த ஊதிய தொகை குற்றத்தின் மூலம் வருமான ஈட்டப்பட்டதாக கருதப்பட்ட நிலையில், நேற்று(பிப்ரவரி17) அன்று இந்த சொத்து முடக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தச் சொத்து முடக்க உத்தரவு தற்போது தற்காலிகமானது என்பதும், இது குறித்த மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.


ஜெயசூர்யா விளக்கம்:

ஒரு விளம்பர ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே தான் அந்தப் பணத்தைப் பெற்றதாகவும், தனது நிதி பரிமாற்றங்கள் அனைத்தும் சட்டபூர்வமானவை என்றும் ஜெயசூர்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement