முறையாக சாக்கடை வசதி அமைக்காததால் அவதி பெரியகுளம் நகராட்சி 15வது வார்டில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு
பெரியகுளம்: பெரியகுளம் நகராட்சி தென்கரை 15 வது வார்டு செயின்ட் சேவியர் தெருவில் பல மாதங்களாக சாக்கடை வசதி செய்து தராததால் அப்பகுதி பொதுமக்கள் சுகாதாரமற்ற சூழ்நிலையில் வாழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த வார்டில் விவசாய தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இப்பகுதியில் கழிவுநீர் செல்ல சாக்கடை வசதி செய்யாததால் குடியிருப்பு பகுதியில் தேங்குகிறது. ஏழை தொழிலாளர்கள் வசிக்கும் இப் பகுதியில் இரவில் கொசுக்கடியால் நிம்மதியாக தூங்க முடியாமல் பலரும் தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர். கொசு உற்பத்தியை தடுக்க தேங்கிய கழிவுநீரை சுத்தம் செய்து கொசு மருந்து கூட நகராட்சியால் தெளிப்பதில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
பாம்புகள் நடமாட்டத்தால் அச்சம் இந்துமதி, செயின்ட் சேவியர் தெரு: தெருவில் முறையான சாக்கடை வசதி இல்லை. ஒவ்வொரு ஆண்டும் நகராட்சி சாக்கடை கட்டுவதற்கு அளவீடு செய்து செல்கின்றனர். இதனால் வீட்டின் அருகே கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. இந்தப்பகுதியில் பாம்பு நடமாட்டம் உள்ளது. அடிக்கடி பாம்பு பிடித்து வெளியேற்றும் அவல நிலை தொடர்கிறது. குழந்தைகள், சிறுவர்கள் அதிகம் உள்ள இந்த பகுதியில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுமோ என்ற அச்சத்துடன் வாழ்கிறோம். 15வது வார்டின் அடிப்படை வசதிகள் செய்திட வேண்டும்.
அரைகுறையாக உள்ள பணி சரண்யா,செயின்ட் சேவியர் தெரு: மக்கள் தேவைக்கு ஏற்ப இந்த பகுதியில் தெரு குழாய்கள் இல்லை. இதனால் நீண்ட தூரம் சென்று குடிநீர் சுமந்து வரும் நிலை உள்ளது. இந்த தெருவில் கடந்த நவம்பரில் சாக்கடை கட்டுவதற்கு தெருவில் பதிக்கப்பட்டிருந்த பேவர் பிளாக் கற்கள் முழுவதையும் அகற்றினர். ஒரு புறம்சாக்கடை கட்டிய நிலையில், மறுபுறம் கட்டாமல் கிடப்பில் போட்டுவிட்டனர். இதனால் தினமும் முதியோர், சிறுவர்கள் விழுந்து காயப்படுகின்றனர். தேர்தல் தேதி அறிவிப்பதற்குள் அரைகுறையாக உள்ள சாக்கடை பணியை நிறைவு செய்ய வேண்டும்.
சேதமடைந்த சிமென்ட் கற்கள் பாண்டிச்செல்வி : இத்தெருவில் 2005ல் நகராட்சியில் பதிக்கப்பட்ட சிமென்ட் பேவர் பிளாக் கற்கள் சீராக இல்லாமல், ஏற்றம், இறக்கமாக பதித்துள்ளனர். இதுபற்றி நகராட்சியில் பல முறை மனு கொடுத்தும், ஒரு முறை கூட வந்து பார்க்கவில்லை. வெளியூர்களிலிருந்து இரவில் வருவோர் நடந்து வருவதற்கு சிரமப்படுகின்றனர்.
நகராட்சி நிர்வாகம் 15வது வார்டை ஏன் புறக்கணிக்கிறது என தெரியவில்லை. சொத்துவரி, குழாய் வரி, பாதாளச்சாக்கடை வரி ஏன், குப்பை வரி கூட தவறாமல் செலுத்துகிறோம் ஆனால் நகராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகள் செய்து தருவதில் பாராமுகம் காட்டுகிறது என வேதனைப்பட்டார்.
மேலும்
-
டி-20 உலக கோப்பை: நெதர்லாந்து அணிக்கு 194 ரன் இலக்கு
-
மணலி மண்டலக் குழுத் தலைவருக்கு திடீர் உடல்நலக்குறைவு: சென்னை மாநகராட்சியில் பரபரப்பு
-
சைதை துரைசாமியின் புகார்கள் கற்பனையானவை: உச்ச நீதிமன்றத்தில் ஸ்டாலின் தரப்பு வாதம்
-
திருமண வரவேற்பில் ரூ.8.5 கோடியை மணமகள் மீது கொட்டி அலப்பறை; வீடியோ வைரல்
-
மகளிர் ஆணையத்துக்கு தலைவர், உறுப்பினர் நியமிக்க டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
-
அநியாயமான அழுத்தம் தருகிறார்; டிரம்ப் மீது உக்ரைன் அதிபர் புகார்