திருமண வரவேற்பில் ரூ.8.5 கோடியை மணமகள் மீது கொட்டி அலப்பறை; வீடியோ வைரல்

6

சண்டிகர்: பஞ்சாபில் நடந்த திருமண வரவேற்பில், 8.5 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகளை கொட்டியும், வீசி எறிந்தும் மணமகன் குடும்பத்தினர், மணமகளை வரவேற்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.


பஞ்சாப் மாநிலம் டாரன் டாரன் மாவட்டத்தில் தான் இந்த நிகழ்வு அரங்கேறி உள்ளது. திருமண வரவேற்பு அரங்கில் மணமகள் நிற்க, மணமகன் பை ஒன்றில் இருந்த ரூபாய் நோட்டுகளை அவர் மீது வீசினார். குடும்பத்தினரும் அவ்வாறே ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்தனர்.


அவ்வாறு வீசப்பட்ட ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 8.5 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 2-4 லட்சம் என கூறினாலும் எதையும் உறுதிப்படுத்த முடியவில்லை.


இதனை அங்கிருந்த சிலர் தங்களது மொபைல்போனில் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட அது அம்மாநிலத்தில் வைரலாகிஉள்ளது. நெட்டிசன்கள் இந்த வீடியோவுக்கு கலவையான கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். சிலர் மணமகனை பாராட்டினாலும், மற்ற சிலர், இந்த பணத்தை ஏழைகளுக்கு கொடுத்து உதவி செய்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்

Advertisement