ஆப்பனுார் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக உயர்த்த கோரிக்கை பங்குத்தொகை செலுத்தியும் தாமதம் செய்யும் அலுவலர்கள்
கடலாடி: கடலாடி அருகே ஆப்பனுார் ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த பங்குத்தொகை செலுத்தியும் அதிகாரிகள் தாமதம் செய்கின்றனர்.
ஆப்பனூர் ஊராட்சியை சுற்றிலும் அதிக கிராமங்கள் உள்ளன. இங்கு அரசு நடுநிலைப் பள்ளியாக இயங்கி வந்தது. 20 ஆண்டுகளுக்கு முன்பு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 1 முதல் 5ம் வகுப்பிற்கு தனியாக தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 10 வரை வகுப்புகள் உள்ளன. 200 மாணவர்கள் படிக்கின்றனர். தலைமயைாசிரியர் உட்பட 7 ஆசிரியர்கள் பணி புரிகின்றனர்.
இந்நிலையில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிப்பதற்கு 10 முதல் 15 கி.மீ.,ல் உள்ள கடலாடிக்கும், முதுகுளத்துார் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் கல்வி பயில்வதற்காக சென்று வருகின்றனர். ஆப்பனுாரைச் சேர்ந்த பள்ளி முன்னாள் மாணவர் முத்துமுருகன் 30, கூறியதாவது:
ஆப்பனுார் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக் கோரி கிராம பொதுமக்கள் சார்பில் பங்குத்தொகை ரூ.2 லட்சம் அரசுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு செலுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் மாணவர்களின் நலன் கருதி உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு ஆவண செய்ய வேண்டும். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிப்பதற்கு அதிக செலவு செய்து வாகனங்களிலும் சென்று வருகின்றனர்.
பள்ளியில் மேல்நிலை வகுப்புகளுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளன. மாணவியர் தங்கி படிப்பதற்கு அரசு சார்பில் விடுதி அமைத்து தர வேண்டும். இது குறித்து உள்ளூர் இளைஞர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பில் கல்வித்துறைக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.
எனவே தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் எங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றார்.
மேலும்
-
தமிழகம் வருகிறார் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார்; அரசியல் கட்சிகளுடன் பிப்.26ல் ஆலோசனை
-
ஆன்லைன் ஏலச் செயலி மூலம் பண மோசடி: நடிகர் ஜெயசூர்யாவின் ரூ.39 லட்சம் சொத்துக்கள் முடக்கம்
-
ஏஐ மாநாட்டில் சீன ரோபோ காட்சிபடுத்திய பல்கலைக்கு சிக்கல்
-
ரூ.5 ஆயிரம் வழங்கிய திமுக அரசு; வீடு வீடாக பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
-
எத்தனை முறை தமிழகம் வந்தாலும் பிரதமரால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது; செல்வபெருந்தகை ஆரூடம்
-
மிரள வைத்த மயானக் கொள்ளை