மகா சிவராத்திரி விழா
சாயல்குடி: சாயல்குடி அருகே டி.எம்.கோட்டையில் உள்ள கருணாகடாட்சி அம்மன் சமேத செஞ்சடை நாதர் கோயில் மற்றும் அங்காள பரமேஸ்வரி, வீரபத்திர சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மாசி மகா சிவராத்திரி உற்ஸவ விழா நடந்தது. பிப்., 8ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.
நேற்று முன்தினம் இரவு கிராமிய பல்சுவை நிகழ்ச்சி நடந்தது. நேற்று செஞ்சடைநாதர் கோயிலில் இருந்து பால்குட ஊர்வலம் கிராம வீதிகளில் உலா வந்து அங்காள ஈஸ்வரி அம்மன் கோயிலை வந்தடைந்தது. மூலவர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இரவில் அக்னி சட்டி ஆயிரம் கண் பானை வாண வேடிக்கை உள்ளிட்டவைகள் நடந்தது. இன்று அதிகாலை மஞ்சள் அபிஷேகம் மற்றும் காப்பு பெருக்குதல் நிகழ்ச்சியும் கருப்பணசாமிக்கு கிடா வெட்டுதல் உள்ளிட்ட பூஜைகளும் நடக்கிறது. ஏற்பாடுகளை டி.எம். கோட்டை கிராம விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
மேலும்
-
தமிழகம் வருகிறார் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார்; அரசியல் கட்சிகளுடன் பிப்.26ல் ஆலோசனை
-
ஆன்லைன் ஏலச் செயலி மூலம் பண மோசடி: நடிகர் ஜெயசூர்யாவின் ரூ.39 லட்சம் சொத்துக்கள் முடக்கம்
-
ஏஐ மாநாட்டில் சீன ரோபோ காட்சிபடுத்திய பல்கலைக்கு சிக்கல்
-
ரூ.5 ஆயிரம் வழங்கிய திமுக அரசு; வீடு வீடாக பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
-
எத்தனை முறை தமிழகம் வந்தாலும் பிரதமரால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது; செல்வபெருந்தகை ஆரூடம்
-
மிரள வைத்த மயானக் கொள்ளை