ரவி நதியில் அணை கட்டும் இந்திய திட்டம் மார்ச்சில் நிறைவு: பாகிஸ்தானுக்கு அடுத்த நெருக்கடி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாயும் ரவி நதியின் உபரிநீர் பாகிஸ்தானுக்கு செல்வதை தடுத்து நிறுத்தும் விதமாக, புதிதாக கட்டப்பட்டு வந்த ஷாபூர் கண்டி அணைக்கட்டுமானப் பணிகள் ஏறக்குறைய நிறைவடைந்து விட்டது.
கடந்த ஆண்டு நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, நீண்ட ஆண்டுகளாக இருந்து வந்த சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்தியது. ரத்தமும் நீரும் ஒன்றாக பாய முடியாது என்று பிரதமர் மோடி பாகிஸ்தானை எச்சரித்து இருந்தார். இதைத்தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளின் குறுக்கே நீர்மின் திட்டங்கள், அணை கட்டுமானப் பணிகளை மத்திய அரசு துரிதப்படுத்தியது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து பாகிஸ்தான் சர்வதேச நீதிமன்றத்தை நாடியது. இருப்பினும், இந்தியா தனது இறையாண்மை மற்றும் உரிமையின் அடிப்படையில் இந்தத் திட்டங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
செனாப் நதியில் நீர்மின் திட்டப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. ஜீலம் நதியின் குறுக்கே நிறுத்தப்பட்டிருந்த வுலர் அணைக் கட்டுமானப் பணிகளையும் இந்தியா மீண்டும் தொடங்க உள்ளது. அதேபோல, ரவி நதியின் உபரி நீர் பாகிஸ்தானுக்குச் செல்வதைத் தடுக்கும் விதமாக, கட்டப்பட்டு வந்த ஷாபூர் கண்டி அணைக் கட்டுமானப் பணியும் மார்ச் 31ம் தேதிக்குள் நிறைவடைய உள்ளது. இதனால், ஏப்ரல் மாதம் முதல் பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருந்த உபரிநீர் குறைந்துவிடும்.
இதனால், கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே, பாகிஸ்தானில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கப் போகிறது.
போதிய சேமிப்பு வசதிகள் இல்லாததால் ரவி நதியின் உபரி நீர் பாகிஸ்தானுக்குச் சென்று கொண்டிருந்தது. தற்போது, புதிய அணையின் மூலம், ரவி நதியின் உபரிநீர், ஜம்மு-காஷ்மீரின் கதுவா மற்றும் சாம்பா மாவட்டங்களின் பாசனத்திற்குப் பயன்படுத்தப்பட இருக்கிறது.
மதசார்பற்ற பாமரன் எங்கிருந்தாலும் வந்து கருது தெரிவிக்கவும்.
மிக சரியாக சொன்னீர்கள். அங்கே அடித்தால் இங்கே அழக் கூடியவர்கள் இருக்கிறார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டிலும் கூட இதைப் பார்க்கலாம். தேசப் பற்றற்ற இந்த தண்டங்களை பாகிஸ்தான் விசுவாசியாக இருப்பதால், பேசாமல் அங்கேயே அனுப்பி விடலாம். அங்கும் இவர்களால் அரசியல் விளையாட்டு காட்டாமல் சும்மா இருக்க முடியாது என்பதால் அங்கேயும் இந்த கழக கண்மணிகள் கலகம் செய்ய முற்படலாம் என்பதால் பாகிஸ்தானுக்கு அனுப்புவது தான் சரியான தண்டனை ஆக இருக்கும்.
> "உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட மிகச் சரியான நடவடிக்கை இந்தியாவின் உரிமையை நிலைநாட்டி, பாகிஸ்தானுக்குப் பொருளாதார ரீதியாகவும் நீர் ரீதியாகவும் நெருக்கடி கொடுப்பதன் மூலம் மட்டுமே பயங்கரவாதத்தை ஒடுக்க முடியும். வாழ்த்துகள் பாரத அரசுக்கு"
>
> "இத்தனை ஆண்டுகாலத் தாமதத்திற்குப் பிறகு இந்தத் திட்டம் நிறைவடைவது மகிழ்ச்சி. நமது தண்ணீர் நமது விவசாயிகளுக்கே இனி ஒரு சொட்டு நீர் கூடத் தேவையற்ற இடத்திற்குச் செல்லக் கூடாது. "
அருமை. உடனே இந்தியாவில் இருக்கும் செலக்டிவ் நடுநிலை போலி போராளி புல்லுருவிகள் பாகிஸ்தானின் விவசாயிகள் வயிற்றில் இந்தியா அடிக்கக்கூடாதுன்னு ஃபாரின் ஃபண்டுல நீலிக்கண்ணீர் விடுவானுங்க. அவனுங்கள அப்படியே பாகிஸ்தானுக்கு நாடு கடத்திரணும்.மேலும்
-
தமிழகம் வருகிறார் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார்; அரசியல் கட்சிகளுடன் பிப்.26ல் ஆலோசனை
-
ஆன்லைன் ஏலச் செயலி மூலம் பண மோசடி: நடிகர் ஜெயசூர்யாவின் ரூ.39 லட்சம் சொத்துக்கள் முடக்கம்
-
ஏஐ மாநாட்டில் சீன ரோபோ காட்சிபடுத்திய பல்கலைக்கு சிக்கல்
-
ரூ.5 ஆயிரம் வழங்கிய திமுக அரசு; வீடு வீடாக பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
-
எத்தனை முறை தமிழகம் வந்தாலும் பிரதமரால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது; செல்வபெருந்தகை ஆரூடம்
-
மிரள வைத்த மயானக் கொள்ளை