தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை; இன்று சவரனுக்கு ரூ.720 குறைவு
சென்னை: சென்னையில் இன்று (பிப்ரவரி 18) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
@1brசர்வதேச நிலவரங்களால் நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலைகள் ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டது. கடந்த சில தினங்களாக தங்கம் விலை சரிந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 16) ஆபரண தங்கம் கிராம், 14,440 ரூபாய்க்கும், சவரன், 1,15,520 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 265 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று (பிப்ரவரி 17), தங்கம் விலை கிராமுக்கு, 120 ரூபாய் குறைந்து, 14,320 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 960 ரூபாய் சரிவடைந்து, 1,14,560 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் இன்று (பிப்ரவரி 18) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
கிராமுக்கு 90 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14,230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 2 ஆயிரத்து 640 ரூபாய் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 260 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிலோவுக்கு 5 ஆயிரம் குறைந்து ஒரு கிலோ 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (1)
raja - ,
18 பிப்,2026 - 13:41 Report Abuse
தங்கம் விலை குறையாதாட்டுருக்கே 0
0
Reply
மேலும்
-
தமிழகம் வருகிறார் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார்; அரசியல் கட்சிகளுடன் பிப்.26ல் ஆலோசனை
-
ஆன்லைன் ஏலச் செயலி மூலம் பண மோசடி: நடிகர் ஜெயசூர்யாவின் ரூ.39 லட்சம் சொத்துக்கள் முடக்கம்
-
ஏஐ மாநாட்டில் சீன ரோபோ காட்சிபடுத்திய பல்கலைக்கு சிக்கல்
-
ரூ.5 ஆயிரம் வழங்கிய திமுக அரசு; வீடு வீடாக பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
-
எத்தனை முறை தமிழகம் வந்தாலும் பிரதமரால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது; செல்வபெருந்தகை ஆரூடம்
-
மிரள வைத்த மயானக் கொள்ளை
Advertisement
Advertisement