ஹிந்து மத சடங்கு சம்பிரதாயங்கள் குறித்து கேலிப்பேச்சு; திமுக எம்பிக்கு வலுக்கும் கண்டனம்
சென்னை: ஹிந்து மத வழிபாடு மற்றும் சடங்கு சம்பிரதாயங்களை கேலி, கிண்டல் செய்த, சேலம் திமுக எம்பி செல்வகணபதியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அண்மையில் சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் திமுக எம்பி செல்வகணபதி ஹிந்து மத வழிபாட்டு முறையை இழிவுபடுத்தும் வகையில் பேசினார். கோவில்களில் கடவுளுக்கு வழிபாடு நடத்தப்படும் போது மேற்கொள்ளப்படும் சடங்கு சம்பிரதாயங்களை கிண்டல் செய்வது போல பேசிய அவர், 'நான் சொன்னது எனக்கும் புரியாது, உனக்கும் புரியாது,' என்று கேலி செய்தார். கோடிக்கணக்கான பேர் புனிதமாக கருதும் வழிபாட்டு மந்திரங்களை இழிவு படுத்துவது போலவும் பேசினார்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒரு மதத்தின் வழிபாட்டு முறையை எம்பி ஒருவர் கேலி கிண்டல் செய்யலாமா? ஹிந்து மக்களின் மத உணர்வை புண்படுத்தலாமா? என்று கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
திமுக ஹிந்து விரோத போக்கை கடைபிடித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், திமுக எம்பியின் இந்தப் பேச்சு மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திமுக அமைச்சராக இருந்த பொன்முடி இதே போன்று பேசி பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (93)
கடல் நண்டு - Dhigurah,இந்தியா
18 பிப்,2026 - 22:11 Report Abuse
மற்ற மத வழிபாடுகளை பற்றி பேச திராணி இல்லாத கோழைகள் .. இந்துக்கள் விழிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை .. சீக்கிரத்தில் இந்த இந்து பத் விரோதகளுக்கு முடிவு கட்டப்பபடும் . 0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
18 பிப்,2026 - 21:57 Report Abuse
உனது வாயில் நல்ல வார்த்தையே வராதா எனக்கும் புரியாது உனக்கும் புரியாது என்று எப்படி இவர் சொல்ல முடியும் நீ புரிந்து கொள்ள ஆசைப்பட்டால் அந்த மொழியை கற்றுக்கொண்டு அதன் அர்த்தத்தை தெரிந்து கொள்ளலாமே அதற்கு உன் மனசு இடம் கொடுக்கவில்லையே அப்படி அல்ல மற்றவர்கள் பல மொழிகளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார்கள் அதன் மூலமாக அந்தந்த வார்த்தைகளின் அர்த்தத்தை புரிந்துகொள்ள துடிக்கிறார்கள் முதலில் உன்பெயரை மாற்றிக்கொள்ள அதுவும் செல்வ என்ற பெயரை நீக்கிவிடு பிறகு வரும் வார்த்தையும் ஒரு கடவுளின் பெயர்தான் அதையும் நீக்கிவிட்டு பேசு ஊருக்கு உபதேசம் செய்ய வேண்டாம் முதலில் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும் 0
0
Reply
Nandakumar Naidu - ,
18 பிப்,2026 - 21:46 Report Abuse
இதிலே பெயர் செல்வ கணபதி என்று பெயர் வேறு 0
0
Reply
ALAGAPPAN NACHIAPPAN NACHI - ,
18 பிப்,2026 - 21:46 Report Abuse
5000போச்சு 0
0
Reply
Nandakumar Naidu - ,
18 பிப்,2026 - 21:42 Report Abuse
இந்த ஹிந்து விரோதிகளுக்கு தூக்கம் வராது போல் என்னவோ. 0
0
Reply
சந்திரசேகர் - ,
18 பிப்,2026 - 21:34 Report Abuse
இவர்கள் இப்படி பேசினால் தான் பிஜேபி வடநாட்டில் இதை பெரிதுபடுத்தி ஓட்டு வாங்க முடியும். இவர்கள் இப்படி பேசுவது இவர்களின் பிறப்பை கேலி செய்வதற்கு சமம். இவர்களின் தைரியம் ஹிந்து மதம் வரைக்கும் தான். ஒற்றுமை இல்லாத ஹிந்துக்கள் எதையும் சகித்துக் கொள்வார்கள் 0
0
Reply
subash - ,இந்தியா
18 பிப்,2026 - 21:30 Report Abuse
நாம் பாடம் கற்கவேண்டும். 0
0
Reply
subash - ,இந்தியா
18 பிப்,2026 - 21:21 Report Abuse
ஹிந்து மதத்தினை கிண்டல் செய்யும் எம்பி பதவியை பறிக்கும் படி சட்டம் வேண்டும். இதனை செய்ய யோகி ஆதித்யநாதிஜி தலைமையில் வெகு விரைவில் மத்திய அரசு அமையவேண்டும். 0
0
Reply
Priyan Vadanad - Madurai,இந்தியா
18 பிப்,2026 - 21:21 Report Abuse
ஒன்றுமில்லாத விஷயங்களை ஊதி பெரிதாக்கி காட்டுவதனால் யாருக்கு என்ன லாபம்? 0
0
theruvasagan - ,
18 பிப்,2026 - 21:49Report Abuse
மற்ற மதங்களை பற்றி இப்படி பேசினால் அவர்கள் ஊதி பெரிதாக்காமல் வாயை மூடிக்கொண்டு போவார்களா. அவர்களுக்கு நீங்களும் இதே அறிவுரையை வழங்குவீர்களா. 0
0
sundararajan - bangalore,இந்தியா
18 பிப்,2026 - 21:54Report Abuse
மற்ற மதங்களைப் பேசினாலும் ஒன்றுமில்லை.ஏன் யாருக்கும் தைரியமில்லை? 0
0
Reply
கண்ணா - ,
18 பிப்,2026 - 21:20 Report Abuse
இந்த திருட்டு திமுக கூட்டம் மற்ற மதங்களை விமர்சிப்பார்களா?...முதுகெலும்பு இல்லாத கோழைகள்.. 0
0
Reply
மேலும் 81 கருத்துக்கள்...
மேலும்
-
ஈரான் ராணுவ தளங்கள் அருகே தீவிபத்தால் பரபரப்பு
-
கோவிட் இழப்பீடு கோரி 36 பிரிட்டன் பல்கலை.க்கு நோட்டீஸ்: இந்தியர்கள் உள்பட 1.7 லட்சம் மாணவர்கள் சட்ட நடவடிக்கை
-
இளைஞர்களின் அரசு வேலை கனவை பறிக்கும் திமுக அரசின் ஆட்சி கனவும் பறிக்கப்படும்; நயினார் நாகேந்திரன்
-
42 தமிழக கட்சிகள் நீக்கம்; தேர்தல் கமிஷன் உத்தரவுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
-
டில்லியில் களைகட்டியது ஏஐ மாநாடு: பாரத மண்டபத்தில் குவிந்த உலக தலைவர்கள்
-
டி-20 உலக கோப்பை: நெதர்லாந்து அணிக்கு 194 ரன் இலக்கு
Advertisement
Advertisement