ஈரான் ராணுவ தளங்கள் அருகே தீவிபத்தால் பரபரப்பு

டெஹ்ரான்: ஈரானில் ராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறை சார்ந்த இடமருகே உள்ள கட்டடத்தில் தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.


பராந்த் நதி அருகே உள்ள இந்தப் பகுதியில் தீவிபத்து காரணமாக எழுந்த புகை வானை முட்டும் அளவுக்கு சென்றது. தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்கா ஈரான் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. மத்திய கிழக்கை நோக்கி போர் விமானங்களை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. ஈரான் மீது தாக்குதல் நடத்தினால், அதற்கு வலிமையான பதிலடி கொடுப்போம் என ஈரான் எச்சரித்து இருந்தது.


அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் கூறியிருந்தார். இச்சூழ்நிலையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement