வீடு இல்லாதவர்களுக்கு தற்காலிக தங்குமிடங்கள்; சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னை: சென்னையில் வீடு இல்லாதவர்களுக்கு ரூ.12 கோடியில் தற்காலிக தங்குமிடங்கள் அமைக்கப்படும் உள்பட பல்வேறு அறிவிப்புகளுடன் கூடிய பட்ஜெட்டை சென்னை மாநகராட்சி மேயர் தாக்கல் செய்தார்.
சென்னை ரிப்பன் மாளிகையில் நடந்த பட்ஜெட் கூட்டத்தில், 2026-27ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார். அதில், பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.
அவை பின்வருமாறு;
மெரினா கலங்கரை விளக்கம் முதல் அண்ணா நினைவிடம் வரை ரோப் கார் சேவை வசதி
சென்னை மாநகராட்சி பூங்காக்களில் மழைநீர் சேகரிப்பு திட்டம் ரூ.20 கோடி மதிப்பில் அமைக்கப்படும்
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 50 விளையாட்டு திடல்களை ரூ.20 கோடி செலவில் மேம்படுத்த நடவடிக்கை
வீடு இல்லாதவர்களுக்கு ரூ.12 கோடியில் தற்காலிக தங்குமிடங்கள் (கன்டெய்னர் கொள்கலன் வீடுகள்) அமைக்கப்படும்
கோடை காலங்களில் தூய்மைப் பணியாளர்களுக்கு மோர் வழங்கப்படும்
தொற்றுநோய் மருத்துவமனையில் புறநோயாளி பிரிவு கட்டடம் கட்டுவதற்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
இந்த பட்ஜெட் மீதான விவாதம் வரும் 20ம் தேதி நடைபெற இருக்கிறது. கடந்தாண்டில் சென்னை மாநகராட்சி பட்ஜெட்டுக்கு ரூ.8,404 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஊழல் குற்றச்சாட்டில் தப்பிக்க காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்த கருணாநிதி : விஜயகாந்த் பேசிய வீடியோ வைரல்
-
'சுழல்' வலையில் தவிக்கும் இந்தியா...
-
ஜிம்பாப்வே 'சூப்பர்' வெற்றி * இலங்கை அணியை வீழ்த்தி அசத்தல்
-
அபிஷேக் தேறுவது எப்படி * கவாஸ்கர் 'அட்வைஸ்'
-
பைனலில் கர்நாடக அணி * ரஞ்சி கோப்பை தொடரில்
-
ஏ.ஐ.,யை பார்த்து யாரும் அஞ்ச வேண்டாம்; எல்லாவற்றிலும் மனித மூளை தான் சிறந்தது!
Advertisement
Advertisement