ஏ.ஐ.,யை பார்த்து யாரும் அஞ்ச வேண்டாம்; எல்லாவற்றிலும் மனித மூளை தான் சிறந்தது!
புதுடில்லி: ''எல்லாவற்றிலும் சிறந்தது மனித மூளை தான். செயற்கை நுண்ணறிவு, மனித குலத்திற்கு ஒரு வெகுமதி. அதை சரி வர, தேவையான அளவுக்கு மட்டும் மனிதர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என, இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவரான, என்.ஆர்.நாராயணமூர்த்தி கூறினார்.
டில்லி பல்கலைக்கழகத்தில், 'லீடர்ஸ் டாக்' என்ற நிகழ்ச்சியில், பல துறை வல்லுனர்கள் பேசி வருகின்றனர். நிகழ்ச்சியில், என்.ஆர்.நாராயணமூர்த்தி பங்கேற்றார். அதற்கான நிகழ்ச்சிக்கு, குஜராத் மாநில முதல்வரின் முதன்மை ஆலோசகர் ஹஸ்முக் அதியா தலைமை வகித்தார்.
அந்த கூட்டத்தில், என்.ஆர்.நாராயணமூர்த்தி பேசியதாவது: செயற்கை நுண்ணறிவு, மனித குலத்திற்கு ஒரு வெகுமதி போன்றது. அது, மனித குலத்திற்கு மிரட்டல் அன்று. இளைஞர்களை கற்க துாண்டுகிறது.
எதுவாக இருந்தாலும், மனித மூளை தான் சிறந்தது. ஆற்றலில் அதை மிஞ்ச, செயற்கை நுண்ணறிவால் முடியாது. இளைஞர்கள் தான் இந்த நாட்டின் சொத்து. பொதுவாக கிடக்கும் வளங்களை போதுமான அளவிற்கு மட்டும் பயன்படுத்த மாணவர்களுக்கு, பள்ளி ஒன்றில் கற்றுத் தரப்படுகிறது. நுண்ணறிவு அந்த வகையில், தொழில் செய்ய வேண்டியது தான்; லாபம் ஈட்ட வேண்டியது தான். எனினும், வருமானமும், லாபமும் இரண்டாம் தரமானவை தான். மனித உழைப்பும், மனித மூளையும் தா ன் முக்கியமானவை.
இன்போசிஸ் நிறுவனத்தில் வெளிப்படையான கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன. தொழிலாளர்களின் செயல்பாடுகளை மேம்படுத்திக் கொள்ள, ஆறு மாதங்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த பயிற்சியில் பெரும்பாலான தொழிலாளர்கள் தேர்ச்சி அடைந்து விடுகின்றனர்.
எனவே, மனித மூளை தான், அனைத்திலும் சிறந்தது. செயற்கை நுண்ணறிவு, எந்த காலத்திலும், மனித மூளையை முந்தித் செல்லாது என்பதை உறுதியாக நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மனித மூளை உயர்ந்ததுதான், ஆனால் எத்தனை பேர் அதனை உபயோகிக்கிறார்கள்? பெருவாரியான மக்கள் இதனால் பாதிக்க படுவார்கள் இப்போதே எளிமையான பெருக்கல் வாய்ப்பாடுகளை மறந்து விட்டார்கள். ஒன்றுண்டு போன் நம்பர்கள் தவிர அனைத்தும் நினைவில் இல்லை. நவீன தொழில் நுட்பம் நம்மளை அடிமையாக்குவதாக இருந்துவிட கூடாது.
it துறையில் 40 வயதுக்கு மேல் பனி புரிவது சிரமமாக உள்ளது ai வந்தால் வேலை வாய்ப்புகள் என்ன ஆகுமோ
ஏஐ விஷயத்தில் எழுத்தாளர் சுஜாதா சொன்னது நினைவில் வைக்கப்பட வேண்டியது ....
இதைச்சொல்லும் இவர் இன்னும் செயற்கை நுண்ணறிவு பற்றி எந்த அறிவும் இல்லாமல் இருக்கிறார் . அதனால் தான் Chat GPT என்ற செயலியை உருவாக்கிய OPEN AI என்ற நிறுவனம் 2016 இயங்க முடியாமல் info நிறுவனத்தின் அப்போதைய மேலாளர் அந்த நிறுவனத்தை மிக மலிவு விலையில் வாங்க ஒப்பந்தம் போட்டு நிறுவனத்தின் தலைமையிடம் அனுமதி கோரினார். கணினி பொறியாளர்களை குறைந்த இந்திய சம்பளத்தில் வேலைக்கமர்த்தி அமெரிக்காவுக்கு அனுப்பி மிகுந்த கூலி பெற்றுக்கொண்டிருந்த இவருக்கு அது பிடிக்காமல் அந்த மேலாளரையும் நீக்கி அந்த ஒப்பந்தத்தையும் காலி செய்து விட்டார் .அப்படி செய்யாமல் இருந்திருந்தால் மோடி அவர்கள் இன்று வேண்டும் வளர்ச்சி எப்போதோ இந்தியா எட்டி செயற்கை நுண்ணறிவில் உலகத்தலைவராக ஆகியிருக்கும் . இன்னும் இவர் பழைய நினைப்பில் தான் இருக்கிறார்.
ஒன்றிரண்டு பேரின் மூளையை உயர்த்திப் பிடிக்க பலகோடி மக்களை சிந்திக்கவிடாமல் மழுங்கடிக்க உருவாக்கப்பட்டதே AI என்னும் நவீன எந்திரம்.
ஆஹா ..... தலைசிறந்த விஞ்ஞானி சொல்லிவிட்டார் .......
ஒருவர் தினமும் 12 மணிநேரம் பணிபுரிய வேண்டுமாம். வாரத்திற்கு 72 மணிநேரமாம். சனிக்கிழமை கூட விடுமுறை கிடையாதாம். சரியான சின்னபுத்தி சின்னசாமி இவன்.
உண்மையை உரக்கச் சொன்னதற்கு நன்றி சந்தோஷம்மேலும்
-
தங்கம் விலை இன்றைய நிலவரம்; சவரனுக்கு ரூ.640 குறைவு
-
தேர்தல் களம் சூடுபிடித்து; திமுகவில் விருப்ப மனு விநியோகம் துவக்கம்
-
சிங்கப்பூரில் டாக்ஸி ஓட்டுநரை அறைந்த இந்திய பெண்ணுக்கு சிறை தண்டனை
-
ரூ.1,300 கோடி பாக்கி இருந்தும் மாநகராட்சி அசரவில்லை; 600 பணிகளுக்கு 'ஜெட்' வேகத்தில் டெண்டர்
-
மக்கள் மனசு: நாட்டின் நலனுக்காக வீட்டுக்கு 3 பிள்ளை
-
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பு; அதிகாரிகள் அலட்சியம்