ஊழல் குற்றச்சாட்டில் தப்பிக்க காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்த கருணாநிதி : விஜயகாந்த் பேசிய வீடியோ வைரல்
சென்னை: திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில், கருணாநிதியை கடுமையாக விமர்சித்து விஜயகாந்த் பேசிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.
திமுக கூட்டணி
இந்நிலையில், இன்று காலை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிரேமலதா மற்றும் அவரது சகோதரர் சுதீஷ் ஆகியோர் திமுக கூட்டணியில் தேமுதிக சேர்வதை உறுதி செய்தனர். திமுக கூட்டணி கட்சியினர் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். பாஜ, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
இது குறித்து சமூகஊடகங்களில் விவாதித்திற்கு உள்ளாகியது. ஒரு பகுதியினர் தேமுதிகவை பாராட்டியும், இன்னொரு பகுதியில் பிரேமலதாவை விமர்சித்தும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.இந்நிலையில் திமுக தலைவராக இருந்த கருணாநிதியை கடுமையாக விமர்சித்து விஜயகாந்த்பேசிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.
பொய் உச்சம்
அந்த வீடியோவில் விஜயகாந்த் கூறியதாவது: கருணாநிதியின் வீடா தமிழ் நாடா என்பது தான் இன்றைக்கு நாடு முன்னாடி நிற்கிறது. ஏனென்றால் தெய்வம் என்பது மக்கள். மக்கள் ஓட்டுப் போட்டால் தானே நீயே வருவ. மக்கள் தான் உங்கள ஊழல்வாதி என்கிறார்கள்.
அந்த கம்சன் அரக்கன் கம்சனை கிருஷ்ணனாகிய மக்களாகிய நீங்கள் அழிக்கணும் என்கிறேன். அதுதான் நடக்க போகிறது. இவர் மாவலி என்று சொல்லி, உடனே என்னுடையது. அது, இது என்று பொய்யோட உச்சத்துல இருக்கார் கருணாநிதி. அதனால மாவலி அரசனுக்கும் அதற்கும் எந்த சம்பந்தம் இல்லை. யாருக்கும் கதை தெரியல. ஏமாற்றுகிறார்.
இவர் எப்போதும் சொல்லுவார்...தமிழினம், தமிழர்களுக்காக, தமிழுக்காக, அப்படி இப்படி என்பார். தமிழர் அப்படின்னு நீங்க சொல்றீங்க ஒத்துக்குறேன். நீங்க தமிழரோட என்றைக்காவது கூட்டணி வச்சிருக்கீங்களா. உங்கள யாரு வடக்கு போய் கூட்டணி வைக்க சொன்னா? சொல்லுங்க பாப்போம். அண்ணாதுரை போராடி காங்கிரஸ் கட்சியை விழ்த்துனார். இவர் ஆட்சிக்கு வந்து அவர்களோடு கூட்டணி வைக்கிறாரு. 1980ல இவருடைய ஊழல் பூச்சிக்கொல்லி ஊழல், கோதுமை பேர ஊழலில் தப்பிக்க வேண்டும் என்பதற்காக கூட்டணி வைக்கிறார். அதன் பிறகு இன்று வரைக்கும் கூட்டணி வைக்கிறார்.
இவர்தான் இந்திராவை அடிச்சாரு. அடிச்சு புட்டு சொல்லிட்டாரு... ரத்தமா... சிகப்பு கலர் ரத்தமா... அது பெண்களுக்கு வர வியாதி தான எப்பயும் போலவும் என சொன்னவர்தான் இந்த சாபக்கேடான கருணாநிதி இவ்வளவும் பேசுகிறார்.
கொள்ளை
இவர் செய்றதெல்லாம் பிராடு. மாநிலத்துல சுயமா கொள்ளை அடிப்போம். மத்தியில கூட்டா கொள்ளை அடிப்போம் என்கிறார். இததான் மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி. இங்க இருக்கற காங்கிரஸ் கட்சியினர், 'முடியாது எங்களுக்கும் பங்கு கொடு' என கேட்கின்றனர். இதுதான் சண்டை தவிர வேற ஒன்னும் கிடையாது. சம்பாதித்ததில் கொஞ்சம் கொடுத்துட்டா கம்ன்னு இருப்பாங்க மந்திரி பதவில்லாம் கேக்கமாட்டார்கள்.
இவ்வாறு விஜயகாந்த் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆக பரவி வருகிறது.
விஜயகாந்தை நினைத்தால் மனம் வருந்துகிறது. நல்ல மனிதர். அவரைப்போல் இன்றைக்கு இருக்கின்ற நல்ல தலைவர்களை நாம் இழந்துவிடக்கூடாது. இந்த இரண்டு திராவிட திருட்டு கூட்டங்களை தவிர வேறு ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழர்களின் கடமை, நமது சந்ததிகளுக்காக.
அரசியலில் இது எல்லாம் சகஜமப்பா?
அப்படி பார்த்தால் மோடி 2014 இல் அமெரிக்கா டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு பற்றி பேசிய வைரல் வீடியோ கூட உள்ளது
அடுத்த ஜாதிக்காரன் ஒண்ணு சேர்ந்துட்டா இந்த பத்திரிக்கைக்குபுடிக்காதே
அம்மையார் பேசின வீடியோவும் இருக்கு...
தே தி முகாவுக்கு என்ன செலவாக்குள்ளது. பலம் இருப்பதாக மாய தோற்றம். பேரம் செய்து சேர்ந்துவிட்டார்கள். விஜயகாந்த் இருந்த வரை கொஞ்சம் மதிப்பு மரியாதை இருந்தது.
கவுரவமாக, உண்மையான சுய மரியாதையுடன் வாழ்ந்தவர் விஜி ........
Shame shame shame Premalatha .
விஜயகாந்த் ஜெயலலிதா அம்மையாரையும் கூடத்தான் கடுமையாக ஊழல் குற்றம் சாட்டி வசை பாடி இருக்கிறார். அதிமுக கூட்டணியில் இருந்தபோது யாரும் அதை கண்டுகொள்ளவில்லையே பழனிசாமியும் தான் பாஜாகாவை கண்டபடி பேசி இருக்கிறார். இப்போது ஒட்டி உறவாடவில்லையா? தினகரன் பழனிசாமி என்னவெல்லாம் பேசினார்கள், இப்போது சேர்ந்துகொள்ளவில்லையா? எங்கள் கூட்டணி நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று சொன்னார்களே. இப்போது நீங்களும் உங்கள் வேலையே பார்க்கலாமே. அவர்கள் கூட்டணியை பற்றி நீங்கள் ஏன் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்?
அப்போ இருந்த வாஷிங் மெஷின் இப்போ பாஜக கையில் இருக்கு.மேலும்
-
நீதிமன்ற நேரத்தை வீணடிக்க முயற்சித்தால் அபராதம் விதிக்க நேரிடும்: ராமதாசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
-
ஈரான் மீது தாக்குதலுக்கு அமெரிக்கா திட்டம்; விமானப்படை தளம் பயன்படுத்த பிரிட்டன் அனுமதி மறுப்பு
-
ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியா அசுர வளர்ச்சி பெறும்; கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை நம்பிக்கை
-
8000க்கும் மேற்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சைகள்: அப்போலோ மருத்துவமனை சாதனை
-
சுயமரியாதை சீண்டப்பட்டால் முதல் குரல் எழுப்புவேன்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
அமைச்சர் நேரு மீது வழக்குப் பதிவு செய்யாத முதல்வர் ஸ்டாலின் பதில் என்ன? கேட்கிறார் அண்ணாமலை