வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா; பியூஷ் கோயல் நம்பிக்கை
மும்பை: ''2047ம் ஆண்டுக்குள் 30 -35 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாகி, வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா சேர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்,'' மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மும்பையில் நடந்த சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பியூஷ் கோயல் கூறியதாவது: கூட்டணிகள், நட்புறவுகளை உருவாக்குதல்,உலகின் பிற பகுதிகளுடன் நமது முதலீட்டை இணைப்பது ஆகியவற்றில் இந்தியா இன்று முன்னணியில் உள்ளது என்று நம்புகிறேன். 2047ம் ஆண்டுக்குள் 30 -35 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாகி வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா சேர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். தனித்து வாழக்கூடிய நாட்கள் போய்விட்டன.
இப்போது சந்தைகளை பாதுகாக்க வேண்டும். முதலீட்டை ஈர்க்க வேண்டும். வர்த்தக வாய்ப்புகளை பாதுகாக்க வேண்டும். சிறந்த தொழில்நுட்பங்களை கொண்ட நாடுகளுடன் தொடர்பில் ஈடுபடுவதுடன், நமது இளைஞர்களுக்கான வாய்ப்புகளை திறக்க வேண்டும். இவை அனைத்து வளர்ச்சிக்கானது.
2022 முதல் 9 ஒப்பந்தங்களை போட்டு உள்ளோம். இந்த ஒப்பந்தங்கள் வலுவான நிலையில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன. எதிர்காலத்துக்காக நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். கடந்த காலத்தில் எங்களுக்கு பல பிரச்னைகள் இருந்திருக்கலாம். ஆனால், நாங்கள் வழங்குவது இந்தியாவின் எதிர்காலத்தில் பங்கேற்க ஒரு வாய்ப்பாகும். இந்திய பொருளாதாரத்திற்கு 26 டிரில்லியன் டாலர்களை சேர்த்துள்ளோம். இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.
@block_B@
பியூஷ் கோயல் மேலும் கூறியதாவது:பிரதமர் மோடி தந்தை போல் செயல்படுகிறார். தனது பதவிக்காலத்தில் இதுவரை யாரையும் அவர் திட்டியது கிடையாது. குரலை உயர்த்தி பேசியதாவது. பெற்றோரை போல் கைகளை பிடித்து கொள்கிறார். நாங்கள் சொல்வதை உன்னிப்பாக கவனிக்கிறார். 100 சதவீதம் அதில் கவனம் செலுத்துகிறார். தனது குழுவினர் நலன் குறித்து அக்கறை கொள்கிறார், வழிநடத்துவதுடன், ஊக்கம் அளிக்கிறார்.அமெரிக்கா இந்தியா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தில் நமது விவசாயிகள் மற்றும் சிறுகுறு தொழில்துறையினர் பாதுகாக்கப்பட்டு உள்ளனர். ஒரு விவசாயி கூட கவலைப்படத் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார். block_B
ஒருநாடு ராணுவ வல்லரசாக தொடர்ந்து 30 வருடங்கள் ஒரு கட்சியின் ஆட்சி தேவை. 15 வருடங்களுக்கு மோடிஜி ஆட்சி செய்யட்டும். பிறகு 15 வருடங்கள் யோகி ஆதித்யநாத்ஜி ஆட்சி வரட்டும். பாரதம் உலக வல்லரசாகி விடும்.
உலகின் 4 ஆம் பொருளாதார வல்லரசு நிலையை ஏற்கனவே எட்டியாகி விட்டது. பாரதம் விமானந்தாங்கி கப்பல்களை வைத்திருக்கிறது. நிலவில் ராக்கெட் இறக்கி விட்ட நாடு. நிலம்-நீர்-வானம் என்று அணுகுண்டு தாக்கவல்ல சக்தி படைத்த நாடு. புல்லெட் ரயில் அடுத்தவருடம் துவங்குகிறது. செமிகண்டக்டர் துறை, ஆர்டிபீஷியல் இன்டெலிஜென்ஸ் துறை, குவான்டம் கம்ப்யூட்டிங்க் துறை என அனைத்திலும் வளர்ந்து வருகிறது. சொந்தமாக மைக்ரோபுரோசசர் இந்த வருடம் வெளியாகிறது. இதற்கு மேல் என்ன வல்லரசாக நிரூபிப்பது ?
மக்களும் நிறைய மாற வேண்டும் . மனம் போனபோக்கில் செயல்படுவது , கேளிக்கை மற்றும் அறியாமையினால் செய்யும் எண்ணற்ற தவறுகளை உணர்ந்து மாற வேண்டும் .
முதலில் மக்கள் மாறவேண்டும். வளர்ந்த நாடுகள் என்பதற்கு பல அடையாளங்கள் உள்ளன. அவற்றில் சிலவாவது நம்மிடம், நம் மக்களிடம் இருக்கிறதா? சுத்தம், சுகாதாரம், கழிவு மேலாண்மை, வெளிச்சமான , குண்டும் குழியுமில்லா சுத்தமான சாலைகள், , லஞ்ச லாவண்யமில்லா அரசாண்மை, நன்கு படித்த திறனுள்ள சட்டசபை, சட்டசபை உறுப்பினர்கள், மந்திரிகள், குற்றம் புரிவோருக்கு உடனுக்குடன் தண்டனைகள் இன்ன பிற. இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம்.மேலும்
-
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 8 மாதங்களில் 924 ' என்கவுன்டர்' மனித உரிமை ஆணையம் அதிர்ச்சி
-
பட்டாசு கடையில் தீ விபத்து சீனாவில் 12 பேர் பலி
-
தேர்தலுக்கு பின்னரே ஆட்சியில் பங்கு
-
'கோவை மக்கள் தங்கள் ஊரை தவிர பிற ஊர்களை கெடுப்பர்' தயாநிதி பேச்சுக்கு பா.ஜ., கண்டனம்
-
'சீட்' கேட்டு டில்லி வர வேண்டாம் தமிழக பா.ஜ.,வினருக்கு எச்சரிக்கை
-
நல்லா போடுறாங்க 'சீன்'