பட்டாசு கடையில் தீ விபத்து சீனாவில் 12 பேர் பலி

பீஜிங்: சீனாவில் பட்டாசு கடையில் தீப்பற்றி எட்டு பேர் பலியான சோகம் மறைவதற்குள், மற்றொரு பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டு 12 பேர் பலியாகி உள்ளனர்.

நம் அண்டை நாடான சீனாவில், சந்திர புத்தாண்டு நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நாடு முழுதும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மக்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

கடந்த 15ம் தேதி ஜியாங்சு மாகாணம் லியான்யுங்காங் நகரில், பட்டாசு கடையில் நடந்த தீ விபத்தில் எட்டு பேர் பலியாகினர்.

இந்நிலையில், ஹூபே மாகாணம் ஜெங்ஜி நகரில் உள்ள ஒரு பட்டாசு கடையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. தீயில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்.

Advertisement