பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 8 மாதங்களில் 924 ' என்கவுன்டர்' மனித உரிமை ஆணையம் அதிர்ச்சி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், குற்றப்பிரிவு போலீசார் நடத்திய 'என்கவுன்டர ் 'கள் மூலம் எட்டு மாதங்களில், 900க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணையம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
கொள்ளை, கடத்தல் போன்றவற்றை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், குற்றக் கட்டுப்பாட்டுத் துறை கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது.
தற்காப்பு என்ற பெயரில் அந்த துறை நடத்தும் தாக்குதல்களில், அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படுவதாக அந்நாட்டு மனித உரிமை ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆணையம் நேற்று முன்தினம் அதிர்ச்சி தரக்கூடிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
குற்றக் கட்டுப்பாட்டுத் துறை, 2025 ஏப்ரலில் உருவாக்கப்பட்டது முதல் டிசம்பர் 2025 வரை, 670 என்கவுன்டர்கள் நடந்துள்ளன. அதில், இரண்டு போலீசார் உட்பட, 924 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
என்கவுன்டர் விளக்கங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக உள்ளன. இரவு நேரத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் மோட்டார் சைக்கிளில் செல்லும் நபர்களை மடக்கிப் பிடிக்கும்போது, துப்பாக்கிச் சூடு நடத்தியதால் போலீசார் தற்காப்புக்காக பதிலடி கொடுப்பதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கொ ல்லப்பட்டவர் இறக்கும் முன் பெயர், முகவரி, குற்ற வரலாறு ஆகியவற்றை தானாகக் கூறுவதாகவும் ஒரே மாதிரியான வாக்கியங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சடலங்களை உடனடியாக அடக்கம் செய்ய குடும்ப உறுப்பினர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இது, சட்டம் மற்றும் அரசியலமைப்பை மீறி நீதிக்குப் புறம்பான கொலையாக உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பஞ்சாப் போலீஸ் எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், மனித உரிமைகள் ஆணையம் நீதி விசாரணை கோரியுள்ளது.
மேலும்
-
இனிவரும் ஆண்டுகளில் கோடைகால சிறப்பு நிதி: சட்டசபையில் தமிழக அரசு உறுதி
-
இலவசம் கொடுப்பதற்கு பதில் வேலைவாய்ப்பை உருவாக்குங்கள்; தமிழக மின் வாரிய வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டிப்பு
-
நாளை திமுக மாசெ கூட்டம்
-
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு; பிப்ரவரி 21ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
நாமக்கல் பள்ளி மாணவியரின் அன்னாசி அறுவடை கருவிக்கு தேசிய போட்டியில் 2ம் இடம்
-
வரலாற்றுக்கு முந்தைய மனிதர்களின் வாழ்விடம் ஆந்திராவில் கண்டறிந்த தமிழக மாணவர்கள்