மூன்று குட்டிகளை ஈன்ற காமினி: சிவிங்கிப்புலிகளின் எண்ணிக்கை 38 ஆக உயர்வு
ஷியோபூர்: மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் உள்ள காமினி என்ற பெண் சிவிங்கிப்புலிக்கு மூன்று குட்டிகளை ஈன்றது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள சிவிங்கிப்புலிகளின் மொத்த எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் கூறியதாவது:
சிவிங்கிப்புலியின் எண்ணிக்கையை மீட்டெடுக்க செப்டம்பர் 2022 இல் தொடங்கப்பட்ட லட்சிய திட்டத்தின் ஒரு பகுதியாக, காமினி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட காமினி, இன்று (பிப்ரவரி 18) மூன்று குட்டிகளை பெற்றது.செப்டம்பர் 2022-ல் தொடங்கப்பட்ட புராஜெக்ட் சீட்டா திட்டத்தின் கீழ் இந்தியாவில் பிறந்த 9-வது பிரசவம் இதுவாகும்.
தற்போது இந்தியாவில் பிறந்த குட்டிகளில் மொத்தம் 27 குட்டிகள் ஆரோக்கியமாக உள்ளன.
சில நாட்களுக்கு முன்புதான் (பிப்ரவரி 7) ஆஷா என்ற சிவிங்கிப்புலி ஐந்து குட்டிகளை ஈன்றது.
இதன் மூலம் இந்தியாவில் உள்ள சிவிங்கிப்புலிகளின் மொத்த எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.
இது நாட்டின் உறுதியான மற்றும் வரலாற்று பாதுகாப்பு முயற்சியின் சக்திவாய்ந்த சின்னம். இவ்வாறு பூபேந்தர் யாதவ் கூறினார்.
புகுந்த இடத்தில் பதினாறும் பெற்று பெரு வாழ்வு .. வாழ்க வளர்க..மேலும்
-
டி-20 உலக கோப்பை: நெதர்லாந்து அணிக்கு 194 ரன் இலக்கு
-
மணலி மண்டலக் குழுத் தலைவருக்கு திடீர் உடல்நலக்குறைவு: சென்னை மாநகராட்சியில் பரபரப்பு
-
சைதை துரைசாமியின் புகார்கள் கற்பனையானவை: உச்ச நீதிமன்றத்தில் ஸ்டாலின் தரப்பு வாதம்
-
திருமண வரவேற்பில் ரூ.8.5 கோடியை மணமகள் மீது கொட்டி அலப்பறை; வீடியோ வைரல்
-
மகளிர் ஆணையத்துக்கு தலைவர், உறுப்பினர் நியமிக்க டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
-
அநியாயமான அழுத்தம் தருகிறார்; டிரம்ப் மீது உக்ரைன் அதிபர் புகார்