புண்ணாக்கு ஏற்றுமதி 42 சதவிகிதம் குறைந்தது

புதுடில்லி: கடந்த ஜனவரியில் புண்ணாக்கு ஏற்றுமதி 42.50 சதவீதம் குறைந்துள்ளதாகவும், சோயாமீல், ராப்சீட் மீல் 50 சதவீதத்துக்கு மேல் சரிந்துள்ளதாகவும் இந்திய எண்ணெய் பிரித்தெடுப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கையின் விபரம்:

கடந்த ஜனவரியில் 2.60 லட்சம் டன் புண்ணாக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய 2025 ஜனவரியில் 4.52 லட்சம் டன் ஏற்று மதி செய்யப்பட்டுள்ளது.

சோயா புண்ணாக்கு ஏற்றுமதி முந்தைய ஆண்டில் 2.86 லட்சம் டன் னாக இருந்த நிலையில் 1.32 லட்சம் டன்னாக கடந்த ஜனவரியில் குறைந்துள்ளது. இதேபோல், கடலை புண்ணாக்கு ஏற்றுமதியும் 2,636 டன்னிலிருந்து 1,067 டன்னாக குறைந்துள்ளது.

@block_B@ புண்ணாக்கு ஏற்றுமதி (ஜனவரி) 2025 ஜனவரி: 4,52,352 டன் 2026 ஜனவரி: 2,60,123 டன்(42.50% குறைவு)block_B

Advertisement