'டவுட்' தனபாலு
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு: அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஒரு பச்சோந்தி; ஒரு கட்சியில் நிலையாக இருக்க மாட்டார். ஜெயலலிதாவால் அடையாளப்படுத்தப்பட்ட அவர், ஜெயலலிதாவுக்கு எதிராகவே கட்சி துவங்கி, இரட்டை இலையை முடக்க நினைத்தார். சேடப்பட்டி முத்தையாவின் காலை பிடித்து அழுது, அ.தி.மு.க.,வில் சீட் கேட்டவர், தான் ராஜ கண்ணப்பன். காலை பிடித்தவர் எல்லாம் எங்களை பற்றி பேசக்கூடாது.
டவுட் தனபாலு: உங்க கட்சியிலும் இன்று முக்கிய பதவியில் இருக்கிறவர், சில வருடங் களுக்கு முன், ஒரு பெண்மணி காலில் விழுந்து தானே பெரிய பதவிக்கு வந்தார்... ராஜ கண்ணப்பனை திட்டுற சாக்குல, அவரையும் சேர்த்துதான் சொல்றீங்களோ என்ற, 'டவுட்' வருதே!
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: கடந்த காலங்களில் நான் செய்த பிழையால், என் மீதான நம்பகத்தன்மையை நாசமாக்கி கொண்டேன். முன்பு அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தது மன்னிக்க முடியாத முடிவானது. இதனால், இமயம் போல இருந்த நான் படுபாதாளத்துக்கு சென்றேன். அதே சமயம் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் கட்சியினருக்கு வழங்கினேன். சினிமா நடிகருக்கு இணையான கூட்டம் எனக்கு வந்தது. ஆனாலும், பல்வேறு தோல்விகளால் கூட்டம் குறைந்தது.
டவுட் தனபாலு: எந்த சாம்ராஜ்யமும் ஒரு காலத்தில் சரியும் என்பது உண்மை... இதற்கு, உலகம் முழுக்க எத்தனையோ வரலாறுகள் இருக்கு... ஆனா, ம.தி.மு.க.,வின் எழுச்சிக்கும், வீழ்ச்சிக்கும் தனிப்பட்ட நீங்க மட்டுமே காரணம் என்பதையும், அதை மறுக்காம ஒப்புக்கொண்ட உங்க அரசியல் நேர்மையையும், 'டவுட்' இல்லாம பாராட்டலாம்!
பா.ம.க., தலைவர் அன்புமணி: தி.மு.க., கூட்டணிக்குள் சண்டை நடக்கிறது. காங்கிரஸ், வி.சி., கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்கின்றன. ஆட்சியில் பங்கு கேட்டு முரண்டு பிடிப்பதால், தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை, தி.மு.க., வினரே தோற்கடித்து விடுவர். 'அதிக தொகுதிகளில் வென்றால் தானே, ஆட்சியில் பங்கு கேட்பாய்' என, காங்., வேட்பாளர்களை தோற்கடிக்கும் வேலையை தி.மு.க., செய்யும்.
- டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... இதனால, அ.தி.மு.க., கூட்டணியில் இருக்கும் நீங்க, காங்., போட்டியிடும் தொகுதிகளா பார்த்து உங்க கட்சிக்கு கேட்டு வாங்குங்க... தி.மு.க.,வினரின், 'உள்குத்து' வேலையால, உங்க கட்சி வேட்பாளர்கள் சுலபமா ஜெயிச்சிடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
அரசியலில் காலில் விழுவது சகஜம்.
அவர் எங்கே காலில் விழுந்தார்? பதவி பெற்றார்?மேலும்
-
ஊழல் குற்றச்சாட்டில் தப்பிக்க காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்த கருணாநிதி : விஜயகாந்த் பேசிய வீடியோ வைரல்
-
'சுழல்' வலையில் தவிக்கும் இந்தியா...
-
ஜிம்பாப்வே 'சூப்பர்' வெற்றி * இலங்கை அணியை வீழ்த்தி அசத்தல்
-
அபிஷேக் தேறுவது எப்படி * கவாஸ்கர் 'அட்வைஸ்'
-
பைனலில் கர்நாடக அணி * ரஞ்சி கோப்பை தொடரில்
-
ஏ.ஐ.,யை பார்த்து யாரும் அஞ்ச வேண்டாம்; எல்லாவற்றிலும் மனித மூளை தான் சிறந்தது!