உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு; பிப்ரவரி 21ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

2


சென்னை: வரும் பிப்ரவரி 21ல் தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி. திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தென்கிழக்கு வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.



இதன் காரணமாக, வரும் பிப்ரவரி 21ம் தேதி தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


அதேபோல், பிப்ரவரி 22ம் தேதி திண்டுக்கல், தேனி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement