இனி ஆண்டுதோறும் கோடைகால சிறப்பு நிதி: சட்டசபையில் தமிழக அரசு உறுதி
சென்னை: தமிழகத்தில் இனி ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் மகளிருக்கு தலா ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.
மகளிர் உரிமைத்தொகையாக மாதம் ஆயிரம் ரூபாயை திமுக அரசு வழங்கி வருகிறது. தேர்தலை முன்னிட்டு அடுத்த 3 மாதத்துக்கு சேர்த்து 3 ஆயிரம் ரூபாய், கோடைகால சிறப்பு நிதியாக 2 ஆயிரம் ரூபாய் என 5 ஆயிரம் ரூபாய், உரிமைத்தொகை பெறும் பயனாளிகள் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது.
இது தொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கேள்வி எழுப்பினார்.
அவர் கூறும்போது, 2026 தேர்தல் உஷ்ணம் அதிகரித்துவிட்டதால் கோடைகாலத்துக்கு 2 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளீர்கள். இரவோடு இரவாக தொகை வரவு வைப்பது தேர்தல் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக மக்கள் பேசுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலம் வருகிறது. தேர்தலை மையமாக வைத்து வழங்கி உள்ளீர்கள். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை யாரும் எதிர்க்க மாட்டார்கள். பிறகு முன்கூட்டியே ஏன் கொடுத்தீர்கள்? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் வேலு,' கோடை காலம் வருகிறது. மக்களுக்கு மருத்துவ செலவு வரலாம் என்பதால் 2 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது,' என்றார்.
தொடர்ந்து அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாவது: கருணாநிதி ஆட்சியில் இலவச டிவி வழங்கிய போதும் அதற்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. இனி எல்லா ஆண்டும் கோடை காலத்தில் மகளிருக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். பாஜவை சேர்ந்தவர் மகளிர் உரிமைத்தொகைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். சூழ்ச்சியை முறியடித்துள்ளோம். இனி எல்லா கோடைகாலமும் மகளிருக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கஜானா காலி... அடுத்த வரி உயர்வக்கு தயாராகுங்க மாக்களே... ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த....
அடுத்த இவிப்பு : குளிர்கால சிறப்பு நிதி 5000 இலவசம்.
மக்கள் நலனில் அக்கறை இருந்தால் டாஸ்மாக்கை மூடினால் நல்லது இல்லையெனில் .டாஸ்மாக்கில் கோடைகால சலுகை கொடுக்கலாம் ஆண்களும் சந்தோஷப்படுவார்கள் .குடிக்க வய்த்த மக்கள் பணத்தை அட்டையப்போடும் கேடுகெட்ட அரசு .
இலவச பிரச்சனை தலைக்கு மீறி செல்கிறது. பிஜேபி வழக்கு போடட்டும் என்று எதிர் பார்ப்பு. அல்லது திமுகவே ஒரு நபரை தயார் செய்து பொது நல வழக்கு போடலாம். அல்லது நீதிபதி சிறப்பு அதிகாரம் கொண்டு ரத்து செய்யும் அளவிற்கு திமுக முயற்சிக்கும். நீதிமன்றம் தடை செய்ய தான் இது போன்ற மிதமிஞ்சிய அறிவிப்புகள். நீதிமன்றம், தேர்தல் ஆணையம், மத்திய அரசு... இலவசம் நிறுத்தவில்லை என்றால், தமிழகத்தை பிரித்து இலவசமாக கொடுத்து விடும், திமுக. விரைவில் யாராவது தடை செய்யுங்கள் ஐயா.
தமிழனை எவ்வளவு தூரம் சோம்பேறி ஆக்க முடியுமோ அதுவும் அவன் பணத்திலேயே , என்ன ஒரு மட்டமான அரசியல் இது , கேரளாவை பாருங்கள் இலவசம் என்றாலே மக்கள் கேலி செய்கிறார்கள் , அங்கு இது போல மக்களை ஏமாற்றி வோட்டு வாங்க முடியாது , உண்மையாகவே நல்ல காங்கிரஸ் தலைவர்கள் அங்கே இருக்கிறார்கள், ஆனால் ஐயகோ தமிழ் நாட்டிலோ பெட்டிக்கு ஆசைப்படும் பெருச்சாளிகள் உள்ளனர்
இலவசம் என்றாலே அது ஒரு வகை லஞ்சம்.
arasu yekka chakkamaaga panam kodukkirahdu
கோடையில் பீர் குடிக்க ஆண்களுக்கு ஓவா கிடையாதா நைனா
குடிசையில் இருந்தவர்களுக்கு இலவச 40W பல்பு மின் இணைப்பு தந்தபோது அது எவ்வாறு உபயோகபடுத்தப்பட்து என்பது ஊரறிந்த இரகசியம். அதுபோலத்தான் எல்லா இலவசமும். நாடு நன்றாக உருப்படும்.பக்கத்து நாடுகள் போன்று திருஓடு ஏத்தலாம்.
இலவசம் கொடுப்பதற்கு பதில் வேலைவாய்ப்பை உருவாக்குங்கள் தமிழக மின் வாரிய வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டிப்பு. என்ன டாஸ்மார்க் அரசே இதற்கு என்ன பதில்??? கஸ்மால அரசே இன்று உன்னால் ரூ 4 லட்சம் கோடி டாஸ்மாக்கினாட்டின் அதாவது ஒரு காலத்தில் தமிழ்நாடு கடன் ரூ 10.25 லட்சம் கோடி ஆயிற்று 5 வருடத்தில் கடன் ஏற்றம் ரூ 6.25 லட்சம் கோடி அதாவது ஒவ்வொரு வருடமும் ரூ 1.25 லட்சம் கடன் அதிகரிப்பு??? இப்போ நீ கோடைகால சிறப்பு தொகை என்று இன்னொரு அறிவிப்பு??? சுத்தமாக உனக்கு கூட்டல் கழித்தல் கூடவா தெரியாது??எவ்வளவு வரவு எவ்வளவு கடன் கடனை எப்படி திருப்பி கட்டி கடனில்லாத மாநிலம் என்று பெயரெடுப்பது???இதை பற்றி யோசிக்காமல் மறுபடியும் ரூ 2000 கோடைக்கால சிறப்பு தொகை???எதற்கு?? ஏப்ரல் / மே மாதம் தேர்தல் என்று நினைத்து இந்த டப்பா???உன்னை வாக்காளர்கள் தேர்ந்தெடுக்காமல் இன்னொரு கட்சியை தேர்ந்தெடுத்தால் அவங்க தலையில் துணி போட்டு ஐயோ இவ்வளவு கடனை எப்படி கட்டுவது என்று முழிக்கணும்னு முடிவு செய்தது போல உனது ஒவ்வொரு காரியமும் இருக்கின்றது இப்போது???மேலும்
-
பாக்ஸ் சிலிகா கூட்டமைப்பில் இணைந்தது இந்தியா; டில்லியில் ஒப்பந்தம் கையெழுத்து
-
கடலோரப் பாதுகாப்பு சவால்களை சமாளிக்க கூட்டு முயற்சி தேவை; ராஜ்நாத் சிங்
-
ஒரே தண்டவாளத்தில் வந்த இரு ரயில்கள்... சென்னையில் பரபரப்பு
-
பணி நியமனத்தில் முறைகேடு; அமைச்சர் நேரு மீது வழக்கு பதிய ஐகோர்ட் உத்தரவு
-
பட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை; அதிமுக, பாஜ புறக்கணிப்பு
-
தங்கம் விலை இன்றைய நிலவரம்; சவரனுக்கு ரூ.640 குறைவு