வி.ஏ.ஓ. அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
பொங்கலுார்: பொங்கலுார், கள்ளிப்பாளையம் ஊராட்சி, வலையபாளையம் கல்லாங்குத்து புறம்போக்கில் செய்தியாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுத்தது.
இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் 'முதலில் வலையபாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.
உள்ளூர் மக்களுக்கு வழங்காமல் வெளியூரைச் சேர்ந்தவர்களுக்கு எப்படி வழங்கலாம்?' என்று கூறி கள்ளிப்பாளையம் வி.ஏ.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களுடன் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி பட்டாவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், உள்ளூரைச் சேர்ந்தவர்களுக்கு பட்டா வழங்க முதலில் முயற்சி எடுப்பதாகவும் உறுதியளித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இனிவரும் ஆண்டுகளில் கோடைகால சிறப்பு நிதி: சட்டசபையில் தமிழக அரசு உறுதி
-
இலவசம் கொடுப்பதற்கு பதில் வேலைவாய்ப்பை உருவாக்குங்கள்; தமிழக மின் வாரிய வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டிப்பு
-
நாளை திமுக மாசெ கூட்டம்
-
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு; பிப்ரவரி 21ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
நாமக்கல் பள்ளி மாணவியரின் அன்னாசி அறுவடை கருவிக்கு தேசிய போட்டியில் 2ம் இடம்
-
வரலாற்றுக்கு முந்தைய மனிதர்களின் வாழ்விடம் ஆந்திராவில் கண்டறிந்த தமிழக மாணவர்கள்
Advertisement
Advertisement