கால்நடை வளர்ப்போருக்கு ஒரு நாள் பயிற்சி முகாம்
உடுமலை: கால்நடைத்துறை சார்பில், கால்நடை வளர்ப்போருக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், மடத்துக்குளம் வட்டார அளவிலான கால்நடை வளர்ப்போருக்கான, ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம் கணியூர் சமுதாய நலக்கூடத்தில் நேற்று நடந்தது.
உடுமலை கோட்ட கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குனர் வெங்கடேசன் தலைமை வகித்தார்.
தோட்டக்கலை உதவி இயக்குநர் உமாசங்கரி மற்றும் துணை தோட்டக்கலை அலுவலர் சிவானந்தம் ஆகியோர், மண்புழு உரம் தயாரிக்கும் முறைகள் மற்றும் அதன் நன்மைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.
தொடர்ந்து, கால்நடை உதவி மருத்துவர்கள் ராஜன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர், கால்நடைகளைப் பராமரிப்பதில் பின்பற்ற வேண்டிய நவீன முறைகள், நோய் தடுப்பு மற்றும் லாபத்தை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர்.
இதில், மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த, நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு, கால்நடைகளுக்கு தேவையான, தாது உப்பு கலவை, மண்புழு உரம், பயிற்சி கையேடு, தீவன விதைகள் வழங்கப்பட்டன.
மேலும்
-
இனிவரும் ஆண்டுகளில் கோடைகால சிறப்பு நிதி: சட்டசபையில் தமிழக அரசு உறுதி
-
இலவசம் கொடுப்பதற்கு பதில் வேலைவாய்ப்பை உருவாக்குங்கள்; தமிழக மின் வாரிய வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டிப்பு
-
நாளை திமுக மாசெ கூட்டம்
-
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு; பிப்ரவரி 21ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
நாமக்கல் பள்ளி மாணவியரின் அன்னாசி அறுவடை கருவிக்கு தேசிய போட்டியில் 2ம் இடம்
-
வரலாற்றுக்கு முந்தைய மனிதர்களின் வாழ்விடம் ஆந்திராவில் கண்டறிந்த தமிழக மாணவர்கள்