குடிசை வீட்டில் தீ தப்பிய குழந்தைகள்


அஞ்செட்டி: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே வண்ணாத்திப்பட்டி அணைக்கட்டு பகுதியை சேர்ந்தவர் மாதேஷ், 32. மேஸ்திரி; இவரது மனைவி வரலட்சுமி, 27. இவர்
களுக்கு, 4 மற்றும் 5 வயதில் இரு குழந்தைகள். நேற்று முன்தினம் மாலை மாதேஷ் மற்றும் அவரது மனைவி வேலைக்கு சென்றிருந்தனர்.


குழந்தைகள் மட்டும் குடிசையில் துாங்கி கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீட்டில் தீப்பிடித்தது. குழந்தைகள் வெளியே ஓடி உயிர் தப்பினர். வீட்டில் வைத்திருந்த, 40,000 ரூபாய் மற்றும் ஒரு பவுன் தங்க நகை ஆகியவை, வீட்டுடன் எரிந்து நாசமானது. அஞ்செட்டி போலீசார், தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

Advertisement