டில்லியில் ஒரே சமயத்தில் அடுத்தடுத்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுடில்லி: டில்லியில் ஒரே சமயத்தில் அடுத்தடுத்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து டில்லி தீயணைப்புத்துறையினர் கூறியதாவது; துவார்கா பகுதியில் உள்ள சிஆர்பிஎப் பப்ளிக் பள்ளி, செயின்ட் தாமஸ் பள்ளி மற்றும் பாசிம் என்க்ளேவ் பகுதியில் இருக்கும் டிஏவி நூற்றாண்டு பப்ளிக் பள்ளி ஆகிய 3 பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது.
உடனடியாக தகவல் அளிக்கப்பட்டு, போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் நாய்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை நடத்தி வருகின்றனர். தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினரும் சம்பவ இடங்களுக்குச் சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர், இவ்வாறு கூறினர்.
ஒரே சமயத்தில் அடுத்தடுத்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் டில்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்
-
ஊழல் குற்றச்சாட்டில் தப்பிக்க காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்த கருணாநிதி : விஜயகாந்த் பேசிய வீடியோ வைரல்
-
'சுழல்' வலையில் தவிக்கும் இந்தியா...
-
ஜிம்பாப்வே 'சூப்பர்' வெற்றி * இலங்கை அணியை வீழ்த்தி அசத்தல்
-
அபிஷேக் தேறுவது எப்படி * கவாஸ்கர் 'அட்வைஸ்'
-
பைனலில் கர்நாடக அணி * ரஞ்சி கோப்பை தொடரில்
-
ஏ.ஐ.,யை பார்த்து யாரும் அஞ்ச வேண்டாம்; எல்லாவற்றிலும் மனித மூளை தான் சிறந்தது!