பாக்ஸ் சிலிகா கூட்டமைப்பில் இணைந்தது இந்தியா; டில்லியில் ஒப்பந்தம் கையெழுத்து
புதுடில்லி: பாக்ஸ் சிலிகா கூட்டமைப்பில் இந்தியா இணைவதற்கான முக்கிய ஒப்பந்தம் இன்று டில்லியில் கையெழுத்தானது. இதில், இந்தியா - அமெரிக்கா பிரதிநிதிகள் கையெழுத்திட்டனர்.
டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் அமெரிக்கப் பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சர் ஜேக்கப் ஹெல்பெர்க் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
செமிகண்டக்டர் மற்றும் ஏஐ துறைகளில் இருநாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும். மேலும், சிப் தயாரிப்பிற்கு தேவையான மூலப் பொருட்கள் முதல் ஏஐ உள்கட்டமைப்பு வரை அனைத்தும் எந்தவித தடையும் இல்லாமல் கிடைக்க இந்த ஒப்பந்தம் வழிவகை செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் பேசியதாவது; பாக்ஸ் சிலிகா பிரகடனத்தில் இந்தியாவின் நுழைவு என்பது வியூக ரீதியானது மற்றும் அவசியமானது. சவால்களை எதிர்கொள்ளும் அளவுக்கு ஆழமான திறமைகளைக் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. இந்த கூட்டமைப்பிற்கு இந்தியாவின் இன்ஜினியரிங் துறையும் அத்தியாவசியமான பங்களிப்பை வழங்குகிறது.
அதுமட்டுமில்லாமல், முக்கிய கனிமங்களின் சுத்திகரிப்பு திறனிலும் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அமெரிக்கா-இந்தியா இடையிலான தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்த உருவாக்கப்படும் கொள்கைகள், வரும் ஆண்டுகளில் ஏஐ கண்டுபிடிப்புகள் மற்றும் அதன் பயன்பாட்டிற்குப் பெரும் சக்தியாக அமையும், இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது; இந்த ஒத்துழைப்பு 1947ம் ஆண்டே கிடைத்திருந்தால், இந்தியாவின் வளர்ச்சி எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்க முடியும். 2014ம் ஆண்டு முதல் இது தொடர்பான பணிகளை நாம் மேற்கொண்டு வந்தாலும், இதற்கான பலன்களை தற்போதைய தலைமுறையினர் அனுபவிக்க முடியும்.
தற்போது திறமைமிக்க நமது இந்திய இன்ஜினியர்கள் அதிநவீன 2 நானோ மீட்டர் சிப்களை வடிவமைக்கின்றனர். செமிகண்டக்டர் துறைக்கு இன்னும் சுமார் 10 லட்சம் திறமையான ஆட்கள் தேவைப்படுகின்றனர். அந்தத் திறமை அனைத்தும் இங்கு தான் உள்ளது. இன்று மாணவர்களுக்கு செமிகண்டக்டர் டூல்கள் இலவசமாக கிடைக்கின்றன. அதன் முடிவுகளும் தற்போது தெரிகின்றன, இவ்வாறு அவர் கூறினார்.
@block_B@
பாக்ஸ் சிலிகா என்பது என்ன?
பாக்ஸ் சிலிகா கூட்டமைப்பில் ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், இஸ்ரேல், கிரீஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது. நம்பகமான தொழில்நுட்ப அமைப்புகளை உருவாக்குவதன் மூலம் உறுப்பு நாடுகளின் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்வதே நோக்கமாகும். சிப் தயாரிப்பிற்குத் தேவையான மூலப் பொருட்கள் முதல் ஏஐ உள்கட்டமைப்பு வரை அனைத்தும், உறுப்பு நாடுகளுக்கு தடையின்றி கிடைப்பதை இந்தக் கூட்டமைப்பு உறுதி செய்யும். block_B
ராகுலின் அனுமதி இல்லாம எப்படி இணையலாம் ???? எப்படி ஒப்பந்தம் போடலாம் ????மேலும்
-
ஈரான் மீது தாக்குதலுக்கு அமெரிக்கா திட்டம்; விமானப்படை தளம் பயன்படுத்த பிரிட்டன் அனுமதி மறுப்பு
-
ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியா அசுர வளர்ச்சி பெறும்; கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை நம்பிக்கை
-
8000க்கும் மேற்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சைகள்: அப்போலோ மருத்துவமனை சாதனை
-
சுயமரியாதை சீண்டப்பட்டால் முதல் குரல் எழுப்புவேன்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
அமைச்சர் நேரு மீது வழக்குப் பதிவு செய்யாத முதல்வர் ஸ்டாலின் பதில் என்ன? கேட்கிறார் அண்ணாமலை
-
கடலோரப் பாதுகாப்பு சவால்களை சமாளிக்க கூட்டு முயற்சி தேவை; ராஜ்நாத் சிங்