ஒரே தண்டவாளத்தில் வந்த இரு ரயில்கள்... சென்னையில் பரபரப்பு
சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பீதியில் பயணிகள் ரயிலில் இருந்து குதித்து வெளியே ஓடினர்.
கோடம்பாக்கம் ரயில் நிறுத்தத்திற்கு சென்னை கடற்கரை நோக்கி ரயில் ஒன்று வந்தது. இதைத்தொடர்ந்து, சிறிது நேரத்தில் தாம்பரம் செல்லும் ரயிலும் அதே தண்டவாளத்தில் வந்தது. இதனால், ரயில்நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் இருப்பதை உணர்ந்து சுதாரித்துக் கொண்ட லோகோ பைலட், ரயிலை பாதியிலேயே நிறுத்தினார். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் இருப்பதை உணர்ந்த பயணிகள், பீதியில் ரயிலில் இருந்து குதித்து வெளியே ஓடினர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
தடம் மாறிய ரயில்கள்
இன்று அனைத்து ரயில்களும் அங்கங்கே நின்றுதான் செல்கிறது அதுவும் தாம்பரம் டு பீச், குறைந்தபட்சம் மூன்று hour ஆகிறது.மேலும்
-
திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு: ஓபிஎஸ் பேட்டி
-
மன்னிக்க முடியாத அளவிற்கு ஊழல் மலிந்த திமுக அரசு: விஜய் விமர்சனம்
-
கல்பனா சாவ்லாவுக்கு நேர்ந்ததைப் போல சுனிதா வில்லியம்ஸூக்கும்... நாசா வெளியிட்ட பகீர் தகவல்
-
நீதிமன்ற நேரத்தை வீணடிக்க முயற்சித்தால் அபராதம் விதிக்க நேரிடும்: ராமதாசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
-
ஈரான் மீது தாக்குதலுக்கு அமெரிக்கா திட்டம்; விமானப்படை தளம் பயன்படுத்த பிரிட்டன் அனுமதி மறுப்பு
-
ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியா அசுர வளர்ச்சி பெறும்; கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை நம்பிக்கை