பட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை; அதிமுக, பாஜ புறக்கணிப்பு
நமது நிருபர்
தமிழக இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதிலுரையை அதிமுக, பாஜ எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர்.
திராவிட மாடல்
சமூகநீதிக்காக திராவிட மாடல் அரசு தொடர்ந்து போராடும். முதல்வர் ஸ்டாலின் பதவியேற்ற
உடன் போட்ட முதல் கையெழுத்து மகளிர் விடியல் பஸ் தான். பெண்களுக்கான பொருளாதார சுதந்திரத்தை அளிக்கும் வகையில் விடியல் பயணம் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் மகளிர் நலன் காக்க திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் அளிப்பதில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது.
நல்லாட்சி
திராவிட மாடல் ஆட்சி நாட்டிற்கே நல்வழி காட்டும் நல்லாட்சி. கோவிட் காலத்தில் ஏற்பட்ட நெருக்கடியை சமாளித்து பொருளாதாரத்தை மீட்டெடுத்தது திராவிட மாடல் ஆட்சி. ஐந்து ஆண்டுகளில் ஜாதி, மத மோதல்கள் எதுவும் இல்லாமல் தமிழகம் அமைதியாக உள்ளது. தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது. சமூக நீதிக்கு பங்கம் வரும்போது எல்லாம் தமிழகம் உரத்த குரல் கொடுக்கும். வளர்ந்த நாடுகளுடன் தான் தமிழகம் போட்டியிடுகிறது மற்ற மாநிலங்களோடு அல்ல. தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் தான் நாம் போட்டி போடுகிறோம்.
வளர்ச்சி
பெயர் என்பது ஒரு சமூகத்தின் ஆணிவேர். பெயர்களை சூட்டுவதிலும் பெயரை மாற்றுவதிலும் தமிழக அரசு உயர்ந்த கவனத்தோடு செயல்பட்டு வருகிறது. நாடே வியக்கும் வண்ணம் கீழடி பொருநை அருங்காட்சியகங்களை முதல்வர் ஸ்டாலின். தமிழக பண்பாட்டின் காவலர் முதல்வர் ஸ்டாலின் என்பது என்றும் வரலாற்றில் மறக்கப்படாது.
வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழகம் வளர்ச்சி பெற வேண்டும் என்பதுதான் திமுக அரசு இலக்கு. மெட்ரோ ரயில் திட்டம், ஜல் ஜீவன் திட்டத்திற்கு நிதி தருவதை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. பள்ளி குழந்தைகள் பசியின்றி பயில அறிமுகம் செய்யப்பட்ட திட்டம் தான் காலை உணவு திட்டம். இவ்வாறு தங்கம் தென்னரசு பேசினார்.
புறக்கணிப்பு
பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதிலுரையை அதிமுக, பாஜ எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர்.
மார்க் ஷீட் அறிக்கை
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றாத வாக்குறுதிகளை மதிப்பெண் பட்டியலிட்டு 'ஆல் பெயில்' என்ற தலைப்பில், அப்பட்டியலை மார்க் ஷீட் வடிவில் சட்டசபை வளாகத்தில் நயினார் நாகேந்திரன் வெளியிட்டார்.
பின்னர் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: தமிழக இடைக்கால பட்ஜெட்டில் எதிர்காலத்திற்கான திட்டங்கள் எதுவும் இல்லை. திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை அவர்களுக்கே இல்லை; 90% வாக்குறுதிகள் கூட நிறைவேற்றபடவில்லை. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதிலுரை தினமலர் யுடியூப் உள்ளிட்ட இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழ்நாடு வாங்கிய கடனளவை மற்ற மாநிலங்களின் கடனளவுடன் ஒப்பிடவேண்டும் ..... கடன் என்னென்ன காரணங்களுக்காக செலவு செய்யப்பட்டது என்பதையும் சேர்த்து ஒப்பிட்டால் முன்னேறிய மாநிலம் சந்திசிரித்துவிடும் .......
திமுகவின் சுயதம்பட்ட, விளம்பர டூபாகூர் பட்ஜெட்டை நீங்கள் இன்னும் எக்ஸ்ட்ரா விளம்பரம் செய்வதை எவனாவது கேட்பானாமேலும்
-
திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு: ஓபிஎஸ் பேட்டி
-
மன்னிக்க முடியாத அளவிற்கு ஊழல் மலிந்த திமுக அரசு: விஜய் விமர்சனம்
-
கல்பனா சாவ்லாவுக்கு நேர்ந்ததைப் போல சுனிதா வில்லியம்ஸூக்கும்... நாசா வெளியிட்ட பகீர் தகவல்
-
நீதிமன்ற நேரத்தை வீணடிக்க முயற்சித்தால் அபராதம் விதிக்க நேரிடும்: ராமதாசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
-
ஈரான் மீது தாக்குதலுக்கு அமெரிக்கா திட்டம்; விமானப்படை தளம் பயன்படுத்த பிரிட்டன் அனுமதி மறுப்பு
-
ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியா அசுர வளர்ச்சி பெறும்; கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை நம்பிக்கை