சிங்கப்பூரில் டாக்ஸி ஓட்டுநரை அறைந்த இந்திய பெண்ணுக்கு சிறை தண்டனை
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் டாக்ஸி ஓட்டுநரை அறைந்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 2 வாரம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய வம்சாவளியான ஷாலினி தேவராஜ், 36, என்பவர் ஈஷூன் பகுதியில் இருக்கும் தனது வீட்டுக்குச் செல்ல டாக்ஸியை புக் செய்துள்ளார். அதன்படி, 73 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஓட்டி வந்த டாக்ஸியில் அவர் ஏறிச் சென்றுள்ளார். வீட்டின் அருகே சென்ற போது, பயணக்கட்டணமாக ரூ.1,500 கொடுக்குமாறு ஓட்டுநர் கேட்டுள்ளார். அதற்கு, தன்னிடம் ரொக்கமாக காசு இல்லை என்று கூறிய ஷாலினி, ஓட்டுநர் பரிந்துரைத்த பணப்பரிமாற்ற முறைகளையும் அவர் ஏற்க மறுத்துள்ளார்.
இதையடுத்து, பணம் எடுத்து வரும் வரையில் செல்போன்னை தன்னிடம் ஒப்படைத்து விட்டு செல்லுமாறு ஓட்டுநர் கூறியுள்ளார். இதனால், ஆவேசமான அவர், ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது. ஒரு கட்டத்தில் அங்கு மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், முதியவரின் கண்ணத்தில் ஷாலினி ஓங்கி அறைந்துள்ளார்.
இதனால், பாதிக்கப்பட்ட அவர் ஒருநாள் பணி விடுப்பு எடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி நடந்த இந்த சம்பவம் நீதிமன்றம் வரை சென்ற நிலையில், ஷாலினி மதுபோதையில் இருந்ததாகவும், பயணத்தின் போது தூங்கியதாகவும் ஓட்டுநர் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, இந்திய வம்சாவளி பெண் ஷாலினிக்கு இரு வாரம் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேலும்
-
ஈரான் மீது தாக்குதலுக்கு அமெரிக்கா திட்டம்; விமானப்படை தளம் பயன்படுத்த பிரிட்டன் அனுமதி மறுப்பு
-
ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியா அசுர வளர்ச்சி பெறும்; கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை நம்பிக்கை
-
8000க்கும் மேற்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சைகள்: அப்போலோ மருத்துவமனை சாதனை
-
சுயமரியாதை சீண்டப்பட்டால் முதல் குரல் எழுப்புவேன்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
அமைச்சர் நேரு மீது வழக்குப் பதிவு செய்யாத முதல்வர் ஸ்டாலின் பதில் என்ன? கேட்கிறார் அண்ணாமலை
-
பாக்ஸ் சிலிகா கூட்டமைப்பில் இணைந்தது இந்தியா; டில்லியில் ஒப்பந்தம் கையெழுத்து