தேர்தல் களம் சூடுபிடித்து; திமுகவில் விருப்ப மனு விநியோகம் துவக்கம்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகம் இன்று (பிப்ரவரி 20) தொடங்கியது.
தமிழக சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அரசியல் கட்சியினர் ஒருபுறம் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர். மறுபக்கம் கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் தொடங்கி உள்ளது. அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனு விநியோகம் பணியை தொடங்கி, முழு வீச்சில் தேர்தல் பணியில் இறங்கிவிட்டது.
இந்த சூழலில், திமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகம் இன்று (பிப்ரவரி 20) தொடங்கியது. தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவோர், இன்று முதல், மார்ச் 2ம் தேதி வரை, தி.மு.க., தலைமை அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம். பொதுத் தொகுதிக்கு 25,000 ரூபாய், மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு 15,000 ரூபாய் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
வேட்பாளராக போட்டியிட விண்ணப்பித்தவர்கள், கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருந்தால், அவர்களின் விண்ணப்ப கட்டணம் பின்னர் திருப்பித் தரப்படும். விண்ணப்ப படிவத்தை தலைமை அலுவலகத்தில், 1,000 ரூபாய் வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
வாசகர் கருத்து (2)
கண்ணா - ,
20 பிப்,2026 - 14:58 Report Abuse
திமுக கட்சி தலைவராக விருப்ப மனு கொடுத்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன் 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
20 பிப்,2026 - 11:22 Report Abuse
ஒரு புறம் விருப்ப மனு துவக்கும், மறுபுறம் ஊழல் வழக்கு பதிவு துவக்கம். சபாஷ் சரியாய் சொன்னீர்கள். களம் எதிர்பார்த்தைவிட சூடாகவே ஆரம்பிதிடிக்கிறது 0
0
Reply
மேலும்
-
பிராம்ப்ட் உருவாக்க செலவாகும் தண்ணீர், மின்சாரம்; மலைக்க வைக்குது ஏ.ஐ.,
-
குஜராத்தில் கார்-லாரி மோதி கோர விபத்து; ஒரே குடும்பத்தினர் 5 பேர் உள்பட 7 பேர் பலியான சோகம்
-
தேர்தல் கமிஷன், மேற்கு வங்க அரசு மோதல்: சுப்ரீம் கோர்ட் கவலை
-
2026ல் பல வர்த்தக ஒப்பந்தங்களில் இந்தியா முத்திரை பதிக்கும்; பியூஷ் கோயல்
-
ஏஐ மாநாட்டில் காங். போராட்டம் தேசிய அவமானம்; பாஜ விளாசல்
-
காங்கிரஸ் ஆட்சியில் நுழைந்த ஊடுருவல்காரர்களை திருப்பி அனுப்புவோம்; அமித்ஷா உறுதி
Advertisement
Advertisement