தி.மு.க. ஒன்றிய செயலாளருக்கு கத்திக்குத்து; திண்டுக்கல்லில் திக்... திக்…
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் வீராசாமிநாதனுக்கு சால்வை போடுவது போல் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
@1brதிண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் வீரா சாமிநாதன். இவர் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர். இன்று இளைஞர் ஒருவர் சாமிநாதனுக்கு பொன்னாடை அணிவிப்பது போல் நடித்து சால்வையில் மறைத்து வைத்திருந்த கத்தியதால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இளைஞரை தடுக்க முயன்ற சாமிநாதனின் ஆதரவாளர் நாச்சிமுத்துவுக்கும் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. தி.மு.க. நிர்வாகி சாமிநாதன் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இளைஞரை கைது செய்த போலீசார், கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் தவெகவில் ஐக்கியம்; அதிமுகவில் அதிர்ச்சி
-
வெளியானது நாம் தமிழர் வேட்பாளர் பட்டியல்; காரைக்குடியில் களம் காணும் சீமான்
-
ராகுல் மஹாராஷ்டிரா வருகை; கருப்புக்கொடி காட்டி பாஜ., சிவசேனா போராட்டம்
-
கேரளாவில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 9 லட்சம் பேர் நீக்கம்
-
நிச்சயதார்த்த அழைப்பிதழால் வந்தது சிக்கல்; மோசடி புகாரில் சிக்கினார் செல்வப்பெருந்தகை!
-
மூன்று வார சிகிச்சையால் பூரண நலன்; வீடு திரும்பினார் ஹெச். ராஜா
Advertisement
Advertisement