முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் தவெகவில் ஐக்கியம்; அதிமுகவில் அதிர்ச்சி
சென்னை: முன்னாள் சபாநாயகரும், அவிநாசி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.,வுமான தனபால் மகன் லோகேஷ் தமிழ்செல்வன், விஜய் கட்சியில் இணைந்துள்ளார்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த தனபால், அதிமுகவில் தொடக்க காலம் முதலே பணியாற்றி வருகிறார். எம்ஜிஆர் ஆட்சியை கைப்பற்றிய 1977 தேர்தலில் சங்ககிரி தொகுதியில் வெற்றி பெற்றவர். அடுத்தடுத்து அதே தொகுதியில் வெற்றி பெற்ற தனபால், ஜெயலலிதா அமைச்சரவையில் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தார். சபாநாயகராகவும் பதவி வகித்தார்.
தற்போது திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக பதவி வகிக்கிறார். அவரது மகன் லோகேஷ் தமிழ் செல்வன். கடந்த லோக்சபா தேர்தலில், இவர் அதிமுக சார்பில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
தன் மகனுக்கு அரசியல் ரீதியாக வாய்ப்பு தர வேண்டும் என்று தனபால் வற்புறுத்தியதன் பேரில், அவருக்கு தொடர்பு இல்லாத போதிலும் நீலகிரி தொகுதியில் அவருக்கு அதிமுக சார்பில் வாய்ப்பு தரப்பட்டது. எனினும் ராஜாவை எதிர்த்து அவரால் வெற்றி பெற முடியவில்லை.
தோல்விக்கு பிறகும் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவில் லோகேஷ் செயல்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று திடீரென லோகேஷ் தமிழ்செல்வன், விஜயை சந்தித்து தவெகவில் இணைந்து விட்டார்.
நீண்ட காலமாக அதிமுகவில் பயணிக்கும் தனபாலின் மகன், திடீரென கட்சி மாறிச்சென்றது அதிமுகவினர் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுடன் இமானுவேல் சேகரன் பேரன் சக்கரவர்த்தி, தலித் எழில்மலையின் மகள் கேத்ரின் எழில்மலை ஆகியோரும் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
மேலும்
-
பாக்., எல்லை அருகே இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் துப்பாக்கிச் சூட்டில் பலி; பயங்கரவாதிகள் செயலா என விசாரணை
-
பெரம்பூரில் விஜய் போட்டி?
-
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் ; இந்தியா பவுலிங்
-
திருப்பூரில் பயங்கரவாதிகள் 8 பேர் கைது... திமுக அரசு மறைமுக ஆதரவு; எல்.முருகன் குற்றச்சாட்டு
-
நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி; திருப்பூரில் சிக்கிய வங்கதேசத்தினர் அதிர்ச்சி தகவல்
-
நக்சல் முக்கிய தளபதி தெலங்கானா போலீஸில் சரண்