ராகுல் மஹாராஷ்டிரா வருகை; கருப்புக்கொடி காட்டி பாஜ., சிவசேனா போராட்டம்
மும்பை: மஹாரஷ்டிரா வந்த ராகுலுக்கு எதிராக, பாஜ., சிவசேனா(ஏக்நாத் ஷிண்டே பிரிவு) தொண்டர்கள் இன்று(பிப்ரவரி 21) கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.
டில்லியில் நடைபெற்ற இந்தியா ஏஐ தாக்க உச்சி மாநாட்டில் , இந்திய இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் மேலாடையின்றி போராட்டம் நடத்தினர். இதற்கு பதிலடி தரும்வகையில் ராகுல் வருகையின் போது இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்த அவதூறு வழக்கில், புதிய பிணைதாரராக மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்காலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பிவண்டி வரும் நிலையில், இன்று மும்பை விமான நிலையத்திலிருந்து தானே மாவட்டம் பிவண்டி நீதிமன்றத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது, முலுண்ட் டோல் பிளாசா மற்றும் ஆனந்த் நகர் செக் போஸ்ட் ஆகிய இடங்களில் பாஜமற்றும் சிவசேனா தொண்டர்கள் திரண்டு அவருக்குக் கருப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்தினர்.
பாஜவின் இந்தப் போராட்டம், தேசியப் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சி என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
எப்படி பட்ஜெட் கூட்டத்தொடரில் பட்ஜெட் பற்றி பேசாமல் எவனோ சினிமா வுக்கு எழுதிய வெளியாகாத போணியாகாத புத்தகத்தை கற்பனையான கதைகளை பேசி முக்கிய விவாதத்தை திசை திருப்பி பின்னங்கால் பட்டறையில் அடிக்க புறமுதுகிட்டு ஓடியதைப்போலவா?மேலும்
-
பாக்., எல்லை அருகே இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் துப்பாக்கிச் சூட்டில் பலி; பயங்கரவாதிகள் செயலா என விசாரணை
-
பெரம்பூரில் விஜய் போட்டி?
-
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் ; இந்தியா பவுலிங்
-
திருப்பூரில் பயங்கரவாதிகள் 8 பேர் கைது... திமுக அரசு மறைமுக ஆதரவு; எல்.முருகன் குற்றச்சாட்டு
-
நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி; திருப்பூரில் சிக்கிய வங்கதேசத்தினர் அதிர்ச்சி தகவல்
-
நக்சல் முக்கிய தளபதி தெலங்கானா போலீஸில் சரண்