கிறிஸ்தவராக இருந்தும் ரிசர்வ் தொகுதியில் போட்டியிட்டது அம்பலம் ; பத்திரிகையால் மோசடி புகாரில் சிக்கினார் செல்வப்பெருந்தகை!
சென்னை: ஸ்ரீபெரும்புதூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ., செல்வப்பெருந்தகை, தேர்தலில் மோசடி செய்து வெற்றி பெற்றுள்ளதால் அவர் மீது கடும் நடவடிக்கை வேண்டும் என்று பாஜ தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
@twitter@https://x.com/narayanantbjp/status/2025189417389109503?s=20twitter
அவரது அறிக்கை:
இணைக்கப்பட்டுள்ள திருமண நிச்சயதார்த்த அழைப்பிதழானது காங்கிரஸ் கட்சி தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை மகளின் நிச்சயதார்த்த அழைப்பிதழ். மணம் முடிக்க காத்திருக்கும் மணமக்களுக்கு நம் வாழ்த்துகளும், ஆசிகளும்.
இந்த அழைப்பிதழ் செல்வப்பெருந்தகையால் பதிவு செய்யப்பட்டது. இந்த அழைப்பிதழின் வாசகங்கள் செல்வப்பெருந்தகை கிருஸ்துவ மதத்தை சார்ந்தவர் என்பதை உறுதிபட தெரிவிக்கின்றது.
செல்வப்பெருந்தகை கிருஸ்துவராகவோ, இஸ்லாமியராகவோ, ஹிந்துவாகவோ இருப்பதில் நமக்கு எந்த பிரச்னையும் இல்லை, ஆட்சேபனையும் இல்லை.
ஆனால், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியானது, பட்டியலின சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகுதி (Reserved Constituency) ஆகும். அந்த தொகுதியில் பட்டியலினத்தை சார்ந்தவர்கள் மட்டுமே போட்டியிட வேண்டும்.
தாங்கள் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றுபவர் என்பதை மறைத்து, ரிசர்வ் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவரை தகுதி நீக்கம் செய்யும் வகையில் பல்வேறு தீர்ப்புகள் ஏற்கனவே நீதிமன்றங்களால் வழங்கப்பட்டுள்ளன.
செல்வப்பெருந்தகை , உண்மையை மறைத்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறி, மோசடி
செய்து தேர்தலில் போட்டியிட்டிருப்பது தெளிவாகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமல்ல; வெட்கக்கேடான செயல். பட்டியலின மக்களுக்கு காங்கிரஸ் கட்சி செய்துள்ள மிகப்பெரிய துரோகமாகும்.
தெரிந்தே இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ள செல்வப்பெருந்தகை பதவி விலக வேண்டும், காங்கிரஸ் கட்சி பட்டியிலின மக்களிடம் மன்னிப்பு கேட்பதோடு, செல்வப்பெருந்தகையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வப்பெருந்தகை வெற்றி செல்லாது என்பதை சட்ட ரீதியாக உறுதி செய்வதோடு, அரசியலமைப்பு சட்டத்தை மீறிய குற்றத்திற்காக செல்வப்பெருந்தகையின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.இவ்வாறு நாராயணன் திருப்பதி அறிக்கையில் கூறியுள்ளார்.
@block_B@
சட்டத்தின்படியும், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகியவற்றின் முந்தைய உத்தரவுகளின்படியும், மதம் மாறிய ஒருவர், தாழ்த்தப்பட்டவருக்கான சலுகையை பெற முடியாது. அதாவது, ஹிந்துவாக இருந்து இஸ்லாமியர் அல்லது கிறிஸ்தவராக மதம் மாறியவர், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதற்கான சலுகையை தொடர்ந்து பெற தகுதியற்றவர். எனவே செல்வப் பெருந்தகை தெரிந்தே இந்த மோசடியை செய்துள்ளார் என்பது, அவர் வெளியிட்டுள்ள அழைப்பிதழ் மூலம் தெளிவாகிறது என்பது பாஜ குற்றச்சாட்டு.block_B
@block_Y@
2021 பிப்.,12ல் ராஜ்யசபாவில் உறுப்பினர் ஒருவர் கேள்விக்கு பதிலளித்த சட்ட அமைச்சர், 'இஸ்லாம் அல்லது கிறிஸ்துவ மதத்துக்கு மாறிய ஒருவர், தாழ்த்தப்பட்டவருக்கான சலுகையை பெற முடியாது. தாழ்த்தப்பட்டவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதியிலும் போட்டியிட முடியாது. 'இந்தியாவில், ஹிந்து, சீக்கியர், பவுத்தர் அல்லாத மதத்தை சேர்ந்த ஒருவர், தாழ்த்தப்பட்டவருக்கான சலுகையை பெற முடியாது' என்று தெரிவித்துள்ளார்.block_Y
பின் புலம் ஆராயாமல் தகுதியற்றவரை தேர்தெடுத்த ராகுல் தான் குற்றவாளி.
திருமாவளவனும் ஒரு கிறிஸ்தவர்தான். இவரது அக்கா இறந்த போது அவரை சவப்பெட்டியில் அடைத்து சர்ச்சுக்கு கொண்டு போய் பாதிரியாரிடம் காண்பித்து பின்பு கிறிஸ்தவ முறைப்படி கல்லறையில் அடக்கம் செய்தார்கள். அதே போல விசிக வன்னியரசும் இந்துப் பெயரில் ஒளிந்திருக்கும் ஒரு கிறிஸ்தவர்தான். மேலும் திமுகவின் நீலகிரி எம்.பி.யான
ஆ.ராசாவும் ஒரு கிறிஸ்தவர்தான் இவரின் மனைவி பரமேஸ்வரி (பெயர் மட்டும்தான் இந்து) இறந்த போது சவப்பெப்டியில் வைத்து கல்லறையில்தான் அடக்கம் பண்ணினார்கள். ஆகமொத்தம் இவர்கள் அனைவருமே இந்துப்
பெயரில் ஒளிந்திருக்கும் கிறிஸ்தவர்களே!
ஓ அவனா இவன் மூஞ்சியில் தெரிகிறது
போய் தேர்தல் ஆணையத்தின் மேலே கேஸ் போடுங்க... இந்தியாவில் எந்த சட்டமும் சாதாரண மக்கள் மேலேதான் ஏவி விடப்படும்.
எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது தமிழக அரசியல் திமுக கூட்டணி ஒட்டு மொத்தமாக கிறிஸ்துவ பின்னணி கொண்ட கட்சியா என்ற சந்தேகம் உள்ளது... ஆ ராஜாவை போல் நானும் ஹிந்து தான் என்று சட்டத்திற்கு சொல்லி விட்டு கிறிஸ்துவ பின்னணியோடு தமிழக அரசியல் உள்ளது என்று நினைக்கிறேன் அதனால் தான் சனாதன தர்மத்தை வேர் அறுப்போம் என்ற கொள்கையோடு உள்ளார்களோ
இவன் சிலுவைன்னா எப்படி தலித்தாக இருப்பான் ..இவனும் ராஜாவும் தேருமாவும் உண்மையான தலித்துகள் இல்லை
வரும் தேர்தலில் போட்டியிட தடை , மற்றும் பென்ஷன் ரத்து இவற்றையெல்லாம் உடனே செய்யவேண்டும் . சவுக்கு விஷயத்தில் மிக கீழ்த்தரமாக நடந்துகொண்ட மிருகம்
இதெல்லாம் புதிது அல்ல. 1998இல் எனக்கு தெரிந்த ஒருவர் நாட்டு கோட்டை செட்டியார் தன் மகளுக்கு பிற்படுத்தப்பட்டவர் என்று சாதி சான்றிதழ் வாங்கி quota/ இடஒதுக்கீடு
மூலம் பிரபல பொறியியல் கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தார்.
இதை செய்து கொடுத்தவர்அவருடைய நண்பர்
அப்போது மாவட்ட பொறுப்பில் உயர் பதவியில் special tahasildar இருந்தவர்.
அந்த மனிதர் ஒரு பெரிய கம்பெனியில்
அம்பத்தூரில் இருக்கும் பொறியாளர் ஆக இருந்தவர். மேலும் என்னுடன் வங்கியில் வேலை பார்த்த ஒருவர்
பழங்குடியினர் ஒதுக்கீடு மூலம் வேலைக்கு சேர்ந்து, பின்பு கிருத்துவ மதத்திற்கு மாறி அதை மறைத்து, சலுகைகள் மூலம் பதவி உயர்வு பெற்று
இன்னமும் பணியில் இருக்கிறார்
அவர் மகன் மத்ய அரசு பணியில் இட ஒதுக்கீடு மூலம் சேர்ந்து விட்டார்.
குற்றச்சாட்டு நிரூபணம் ஆனால் அவர் இதுவரை ஸ்ரீ பெரும்புதூர் MLA என்ற தகுதி அனுபவித்து வந்துள்ள பதவியில் இருந்து நீக்குவதோடு அதன் மூலம் பெற்ற ஆதாயங்களை பண மதிப்பீடு செய்து அபராதத்துடன் வசூலிக்க வேண்டும்.
Congress has made a very bad choice of him nothing good about this person comes in theமேலும்
-
பெயருக்கு மட்டுமே விஐபி தொகுதியான சேப்பாக்கம்: உதயநிதி மீது அண்ணாமலை சாடல்
-
அதிமுக ஒன்றுபட யாரும் முயலவில்லை: திருமாவளவன்
-
4 விக்கெட்களை இழந்தது இந்தியா
-
முதல்வர் ஸ்டாலினுடன் கே.சி.வேணுகோபால் சந்திப்பு: தொகுதி பங்கீடு குறித்து பேச்சு
-
'சீட்' கொடுக்காவிட்டாலும் தேர்தல் வேலை உண்டு: குஷ்பு
-
ஆயுதத்துடன் அதிபர் டிரம்ப் வீட்டுக்குள் நுழைய முயன்றவர் சுட்டுக்கொலை