ஏஐ மாநாட்டில் நடத்திய போராட்டத்தை நியாயப்படுத்துவது வெட்கக்கேடானது; காங். மீது பாய்ந்த மத்திய அமைச்சர்
புதுடில்லி: ஏஐ உச்சி மாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் நடத்திய போராட்டத்தை நியாயப்படுத்துவது வெட்கக்கேடானது என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கண்டித்துள்ளார்.
புதுடில்லியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி;
டில்லியில் பாரத் மண்டபத்தில் ஏஐ உச்சி மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள். பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா செயற்கை நுண்ணறிவு துறையில் சிறப்பாக செயல்படுவதாக புகழ்ந்து பேசினர். இது பெருமைக்குரிய தருணம். பிரதமர் மோடி தலைமையில் உலக நாடுகளை இந்தியாவின் தலைமையின் கீழ் கொண்டு வர வலுவான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கு உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்கள், முக்கிய நபர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். ஆனால், அதே நேரத்தில் இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், ஒரு அவமானகரமான செயலை செய்துள்ளனர். இதற்கு நாடு முழுவதிலும் இருந்து எத்தனை கண்டனங்கள் முன்வைத்தாலும் போதாது.
அவர்கள் செய்தது தவறு அல்ல, ஒரு குற்றம். காங்கிரஸ் உறுப்பினர்கள் நாட்டுக்கு எதிராக செய்த ஒரு செயல். நாட்டை பற்றிய சிறிதளவேனும் அக்கறை இருந்திருக்கும் பட்சத்தில் காங்கிரஸ் தங்களை சுயபரிசோதனை செய்து மன்னிப்பு கேட்கும் என்று நம்பினோம்.
ஆனால், மன்னிப்பு கேட்பதற்கு பதில், நியாயப்படுத்தி இது கோபத்தின் வெளிப்பாடு என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கூறுகின்றனர். உலக நாடுகள் முன், நம் நாட்டை அவமானப்படுத்த கோபத்தை ஒரு கருவியாக பயன்படுத்தினால் அதைவிட வெட்கக்கேடானது என்று எதுவும் இருக்க முடியாது.
இவ்வாறு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசினார்.
வாசகர் கருத்து (9)
KRISHNAN R - chennai,இந்தியா
21 பிப்,2026 - 20:03 Report Abuse
வெளி நாட்டில் சென்று தனது சொந்த நாட்டை குறை சொல்லி வரும் தலைவரின் தொண்டர் எப்படி இருப்பார் 0
0
Reply
Ganesh - Chennai,இந்தியா
21 பிப்,2026 - 17:06 Report Abuse
காங்கிரஸ் காரர்கள் காங்கிரஸ் யை குழி தோண்டி புதைக்காமல் விட மாட்டார்கள் போல...? 0
0
Reply
Dharmavaan - Chennai,இந்தியா
21 பிப்,2026 - 16:24 Report Abuse
உண்மை துணிவு நேர்மை கொண்டவர் ரிஜ்ஜு பொருக்கி ரவுடி காங்கிரஸுக்கு மானம் சூடு சொரணை இருந்தால் மன்னிப்பு கேட்டு இது போல் தொடராமல் இருக்க வேண்டும். தேச துரோகிகள் தேச விரோதி தணடனை ஒன்னு இவைகளை திருத்தும் 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
21 பிப்,2026 - 16:21 Report Abuse
பல லக்ஷம் கோடி முதலீட்டை ஈர்த்து உள்ள உலக அளவு மாநாட்டை, ஒரு சில மணித்துளியில், கேவலப்படுத்திவிட்டார்கள். அராஜக அரசியல் மூலம் நாட்டை பிச்சை எடுக்க வைப்பதே இவர்களின் நோக்கம். நான் பிரதமர் ஆக விட்டால் எவனுமே முன்னேற விடமாட்டேன் என்பது. 0
0
Reply
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
21 பிப்,2026 - 16:03 Report Abuse
கான்+கிராஸ் ஐ விட இழி பிறவி இருக்க முடியுமா? மோடியை எதிர்க்குறேன் பேர்வழி ன்னு நம் தேசத்தின் மேலேயே சேற்றை வாரி வீசும் அவமானகரமான நிகழ்வு இது. இதை படிக்கும் போது நம் மனம் பதறுகிறது. அவனுங்கள் எப்புடி துளி கூட அவமான உணர்வு இல்லாமல் இருக்கிறான்கள்? 0
0
Reply
சூர்யா - ,
21 பிப்,2026 - 15:57 Report Abuse
மன்னிக்கவும். அப்ப இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி கோபத்தின் வெளிப்பாடுதான் என யாராவது கூறினால் இன்றைய ராகுல் காங்கிரஸ் தலைவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? 0
0
Reply
Santhakumar Srinivasalu - ,
21 பிப்,2026 - 15:14 Report Abuse
சர்வ தேச மாநாட்டில் இந்த இழிவான செயலுக்கு தூண்டிய தேச துரோகி யார்? அவன் என்ன சோறு தான் திங்கிறானா? இல்ல வேற ஏதாவது திங்கிறானா? 0
0
Kumar Kumzi - ,இந்தியா
21 பிப்,2026 - 16:16Report Abuse
வேற யாரு பப்பூ கான் தான் 0
0
Santhakumar Srinivasalu - ,
21 பிப்,2026 - 18:58Report Abuse
இரட்டை குடியுரிமை உள்ள ராகுலை தாயோடு சேர்த்து இத்தாலிக்கு நாடு கடத்தினால் இந்தியாவுக்கு மிகவும் நல்லது! 0
0
Reply
மேலும்
-
பெயருக்கு மட்டுமே விஐபி தொகுதியான சேப்பாக்கம்: உதயநிதி மீது அண்ணாமலை சாடல்
-
அதிமுக ஒன்றுபட யாரும் முயலவில்லை: திருமாவளவன்
-
4 விக்கெட்களை இழந்தது இந்தியா
-
முதல்வர் ஸ்டாலினுடன் கே.சி.வேணுகோபால் சந்திப்பு: தொகுதி பங்கீடு குறித்து பேச்சு
-
'சீட்' கொடுக்காவிட்டாலும் தேர்தல் வேலை உண்டு: குஷ்பு
-
ஆயுதத்துடன் அதிபர் டிரம்ப் வீட்டுக்குள் நுழைய முயன்றவர் சுட்டுக்கொலை
Advertisement
Advertisement