பெயருக்கு மட்டுமே விஐபி தொகுதியான சேப்பாக்கம்: உதயநிதி மீது அண்ணாமலை சாடல்

1


சென்னை: '' சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி பெயருக்கு மட்டுமே விஐபி தொகுதியாக உள்ளது,'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சேப்பாக்கம் தொகுதியில் பாஜ கூட்டத்தில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் 234 தொகுதிகள் இருந்தாலும் சில தொகுதிகள் மட்டுமே மக்களின் கவனத்தை பெறும். அந்த தொகுதிகளில் இருந்து முதல்வர், துணை முதல்வர், அமைச்சர், வெற்றி பெற்று இருப்பார்கள். அந்த தொகுதியின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். விஐபி தொகுதி. அங்கு என்ன செய்திருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கும்.

Tamil News
Tamil News
Tamil News
அப்படி பெயருக்கு மட்டுமே விஐபி தொகுதியாக இருப்பது சேப்பாக்கம். வெறும் பெயருக்கு மட்டும் தான் உள்ளது .

துணை முதல்வர் உதயநிதி தொகுதியாக இருந்தாலும், பணி நடந்துள்ளதா என சுற்றி பார்த்தால் இன்னும் சாதாரண தொகுதியை போல், அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தாமல், மக்கள் பிரச்னையை தீர்க்க நேரமில்லாமல் உதயநிதி செயல்பட்டு கொண்டிருக்கிறார். இப்படி சொன்னால் தவறு கிடையாது.


இதற்கு காரணம், திமுகவினரை பொறுத்தவரை சென்னை நமது கோட்டை. நம்மை தாண்டி யாருக்கும் மக்கள் ஓட்டுபோடப்போவது கிடையாது. தேர்தலின் போது திமுக சின்னத்தில் நாம் நின்றால் மக்கள் நமக்கு ஓட்டுப்போடுவார்கள் என்ற இறுமாப்பு, எகத்தாளத்துடன் இருக்கின்றனர்.


சென்னை மக்களை பொறுத்தவரை வாய்ப்பு கொடுக்கும்போது சம்மட்டி அடி கொடுத்துக்கொண்டு வருகிறார்கள். 2011 ல் சென்னையில் நிறயை சம்மட்டி அடிகொடுத்தனர். அதே அடி 2026 சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு எதிராக சென்னை மக்கள் கொடுக்க போகிறார்கள். அப்படிசொன்னால் தவறாக இருகக முடியாது.

சென்னைக்கு தலைநகருக்கு கூடிய அந்தஸ்துடன் வழிநடத்துவது கிடையாது. இதனை மக்கள் பொறுமையாக பார்க்கின்றனர். எந்த வசதி இல்லை. பெயருக்கு மட்டும் இருக்கிறது. மழை பெய்து தெருவுக்கு வந்தால், முதல்வர், துணை முதல்வர் வேட்டியை கட்டி கொண்டு போட்டோ ஷூட் நடத்துகின்றனர். அந்த நேரத்தை தவிர வீதிக்கு வருவது கிடையாது. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Advertisement