ஐ.டி.பி.ஐ., வங்கி தனியார்மயம் எதிர்த்து மார்ச் 9ல் உண்ணாவிரதம்

புதுடில்லி: ஐ.டி.பி.ஐ., வங்கியை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி அதன் பணியாளர்கள், வரும் மார்ச் 9ம் தேதி உண்ணாவிரதம் அறிவித்துள்ளனர்.

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஐ.டி.பி.ஐ., நஷ்டத்தில் இருந்த நிலையில், தற்போது மீண்டு லாப பாதைக்கு திரும்பியுள்ளது. நிதி மற்றும் செயல்பாடுகளில் உறுதியான முன்னேற்றத்தை காட்டியுள்ள சூழலில், மார்ச் 31க்குள் தனியார்மயமாக்கும் அறிவிப்புக்கு பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதை அரசு வாபஸ் பெறாவிட்டால் மார்ச் 9ம் தேதி உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் பின், காலவரம்பற்ற வேலைநிறுத்தம் உட்பட தீவிர போராட்டங்கள் நடைபெறும் என்றும் ஐ.டி.பி.ஐ., வங்கி பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

பொதுத்துறை வங்கியை தனியார்மயமாக்கினால், வங்கியின் உரிமையில் மாற்றம் வரும்போது வாடிக்கையாளர் சேவைகள் பல நிறுத்தப்படக்கூடும் என்றும், அதனால் வாடிக்கையாளர்கள், டிபாசிட்தாரர்கள் பாதிக்கப்படுவர்என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.

Advertisement