டீக்கடைக்காரர் பன்னீரை முதல்வராக்கியது அ.தி.மு.க., தான்: 'மாஜி' அமைச்சர் தாக்கு
மதுரை: ''முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தி.மு.க.,வில் சேர்ந்து விடலாம். டீக்கடை வைத்திருந்தவரை முதல்வராக்கி அழகு பார்த்த கட்சி அ.தி.மு.க., அக்கட்சிக்கு அவர் துரோகம் செய்து விட்டார்,'' என, மதுரையில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு கூறினார்.
நேற்று அவர் அளித்த பேட்டி:
முதல்வர் ஸ்டாலினை முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் சந்தித்ததை, அ.தி.மு.க., தொண்டன் ஒருவன் கூட ஏற்க மாட்டான். கடும் கோபத்தில் மக்கள் உள்ளனர். பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியபோது, சிலர் அதை விமர்சித்தனர்; இப்போது அவர்களுக்கும் தெரிந்திருக்கும், பழனிசாமி எடுத்த நடவடிக்கை சரிதான் என்று. இனியும் காலம் தாழ்த்த வேண்டியதில்லை. பன்னீர்செல்வம் தி.மு.க.,விலேயே இணைந்து விடலாம்.
பெரியகுளத்தில் டீக்கடை வைத்திருந்தவர் பன்னீர். அவரை சேர்மன், எம்.எல்.ஏ., முதல்வராக்கி அழகு பார்த்த கட்சி அ.தி.மு.க., அக்கட்சி வாயிலாகத்தான் அவர் பலமுறை அமைச்சராக இருந்தார். ஆனால், கட்சிக்கு சோதனை என்றதும், குரல் எழுப்பாமல் பம்மியவர் பன்னீர். அது, எங்களுக்கெல்லாம் வருத்தம் தான்.
பன்னீரின் பாதை தெரிந்த பின், அவரோடு இருப்பவர்கள் அ.தி.மு.க.,வுக்கு திரும்ப வேண்டும். தி.மு.க.,வில் இருந்திருந்தால், பன்னீர், ஒரு கவுன்சிலராகக்கூட ஆகியிருக்க மாட்டார்.
சட்டசபையில் எம்.எல்.ஏ., அய்யப்பன், முதல்வரை பாராட்டி பேசியது, அவராக பேசியதல்ல; பின்னணியில் யாரோ இருந்து கொண்டு தான் பேச வைத்துள்ளனர். தி.மு.க., எதிர்ப்பு என்பது ஒவ்வொரு அ.தி.மு.க.,காரனின் ரத்தத்திலும் ஓடுகிறது.
இவ்வாறு கூறினார்.
மேலும்
-
பெயருக்கு மட்டுமே விஐபி தொகுதியான சேப்பாக்கம்: உதயநிதி மீது அண்ணாமலை சாடல்
-
அதிமுக ஒன்றுபட யாரும் முயலவில்லை: திருமாவளவன்
-
4 விக்கெட்களை இழந்தது இந்தியா
-
முதல்வர் ஸ்டாலினுடன் கே.சி.வேணுகோபால் சந்திப்பு: தொகுதி பங்கீடு குறித்து பேச்சு
-
'சீட்' கொடுக்காவிட்டாலும் தேர்தல் வேலை உண்டு: குஷ்பு
-
ஆயுதத்துடன் அதிபர் டிரம்ப் வீட்டுக்குள் நுழைய முயன்றவர் சுட்டுக்கொலை