சிவகாசியில் போதையில் டூவீலரை நடுரோட்டில் போட்டு குடிமகன் அட்டகாசம்
சிவகாசி: சிவகாசி ரயில்வே ஸ்டேஷன் முன்பாக போதையில் டூவீலரை நடுரோட்டில் கீழே போட்டு அடாவடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி ரயில்வே ஸ்டேஷன் வழியாக அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. இப்பகுதியில் அரசு மருத்துவமனை அரசு அலுவலகங்கள் உள்ளதால் எப்பொழுதும் போக்குவரத்து நிறைந்திருக்கும். இந்நிலையில் நேற்று காலையில் அதே பகுதியை சேர்ந்த மகாராஜா 25, மது போதையில் தனது டூவீலரில் நடுரோட்டில் போட்டு அதில் அமர்ந்தபடி ரோட்டில் எந்த வாகனத்தையும் செல்ல விடாமல் தடுத்து அடாவடி செய்தார்.
தவிர டூவீலரில் கீழே தள்ளிவிட்டு ரோட்டில் சலம்பலில் ஈடுபட்டதோடு தகாத வார்த்தை பேசி கத்தினார். இதனால் வாகன ஓட்டிகள் கடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். அங்கு வந்த போலீசார் முன்னிலையிலும் இப்போதை வாலிபர் அட்ராசிட்டி செய்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.
இரு வாரத்திற்கு முன்பு திருத்தங்கலில் மது போதையில் ஒருவர் நடுரோட்டில் படுத்து இதேபோல் ரகளையில் ஈடுபட்டார். ஒரு வாரத்திற்கு முன்பு சிவன் கோயில் நேரடி முக்கில் மது போதையில் ஒருவர் படுத்து கிடந்து மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினார். சிவகாசி பகுதியில் போதை ஆசாமிகள் நடுரோட்டில் இதேபோன்று அடாவடி செய்யும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இது போன்ற செயல்பாடுகளை தடுக்க போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்
-
கூட்டணி கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சு தொடக்கம்
-
இந்தியாவும், பிரேசிலும் ஜனநாயக சகோதரர்கள்; இரு நாட்டு உறவுக்கு அதிபர் லுாலா புகழாரம்
-
மைக்ரோசாப்ட் கேமிங் சிஇஓ ஆக வம்சாவளி இந்தியர் ஆஷா சர்மா நியமனம்
-
ஆப்கன் மீது பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்: 28 பேர் உயிரிழப்பு
-
திமுக தொகுதி பங்கீடு பேச்சு முதல் உலக கோப்பை இந்தியா - தென் ஆப்ரிக்கா பலப்பரீட்சை வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 22)!