இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
புதுடில்லி: நாளை (பிப்ரவரி 23) நடப்பதாக இருந்த இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தியா மீது 25 சதவீத பரஸ்பர வரியுடன் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக மேலும் 25 சதவீத வரி என மொத்தம் 50 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார். இதையடுத்து, இரு நாடுகளிடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இதனால், இந்தியா மீதான வரியை 18 சதவீதமாக குறைத்து அதிபர் டிரம்ப் உத்தரவை வெளியிட்டார்.
தொடர்ந்து, இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது தொடர்பான இறுதிகட்ட பேச்சுவார்த்தை நாளை (பிப்ரவரி 23) முதல் 3 நாட்கள் வாஷிங்டனில் நடத்தப்படுவதாக இருந்தது. இந்த சூழலில், இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான இந்தப் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பிற நாடுகள் மீது விதித்து வந்த வரி உத்தரவை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால், இறக்குமதி பொருட்களுக்கான வரியை 10 முதல் 15 சதவீதம் மட்டுமே விதிக்க முடியும். இது டிரம்புக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், சமீபத்திய பொருளாதார மாற்றங்கள் மற்றும் அவற்றின் தாக்கங்களை இரு நாடுகளும் ஆய்வு செய்த பிறகு, மற்றொரு தேதியில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏதோ தெய்வாதீனமாக, நம் நாட்டிற்கும் சேர்த்து சாதகமான தீர்ப்பை அமெரிக்கா உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது சிறிதளவு ஆறுதல் அளிக்கிறது. மத்திய பா.ஜ.க. அரசு, இந்த வாய்ப்பையாவது, நமக்கு சாதகமாக திருப்ப வேண்டும். அமெரிக்கா உச்சநீதிமன்றத் தீர்ப்பை காரணம் காட்டி, ஏற்கனவே, நாம், ஏமாந்த, இடைக்கால ஒப்பந்தத்தை, முழுமையாக ரத்து செய்ய வேண்டும். 10 சதவீத பரஸ்பர வரிக்கு மேல் கிடையாது, என்று பிரதமர் மோடி அவர்கள் உறுதியுடன் கூற வேண்டும்.மேலும்
-
எஸ்ஐஆர் பணி எதிரொலி; 9 மாநிலங்களில் 1.70 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்
-
பெயருக்கு மட்டுமே விஐபி தொகுதியான சேப்பாக்கம்: உதயநிதி மீது அண்ணாமலை சாடல்
-
அதிமுக ஒன்றுபட யாரும் முயலவில்லை: திருமாவளவன்
-
5 விக்கெட்களை இழந்தது இந்தியா; தென் ஆப்ரிக்கா ஆதிக்கம்
-
முதல்வர் ஸ்டாலினுடன் கே.சி.வேணுகோபால் சந்திப்பு: தொகுதி பங்கீடு குறித்து பேச்சு
-
'சீட்' கொடுக்காவிட்டாலும் தேர்தல் வேலை உண்டு: குஷ்பு