மெக்சிகோவில் வெடித்தது வன்முறை; இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
மெக்சிகோ: அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு போதைப்பொருட்களை கடத்தி வந்த, தேடப்படும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் மெக்சிகோவில் ராணுவ தாக்குதலில் உயிரிழந்தான். இதனால், அங்கு வன்முறை வெடித்துள்ளது. இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
நெமேசியோ ரூபன் ஒசெகுவேரா செர்வாண்டஸ் என்று அழைக்கப்படும் எல் மென்சோ, வளர்ந்த 'ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல்' (CJNG), என்ற அமைப்பின் மூலம் அமெரிக்கா உள்பட பல்வேறு உலக நாடுகளுக்கு போதைப்பொருட்களை கடத்தி வந்தான். எல் மென்சோவை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ரூ.136 கோடி சன்மானம் அறிவித்த அதிபர் டிரம்ப் நிர்வாகம், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு மெக்சிகோ அதிபர் ஷீன்பாம் அரசுக்கு அழுத்தம் கொடுத்தது.
அதன்பேரில், மேற்கு மாநிலமான ஜாலிஸ்கோவில் ராணுவ நடவடிக்கையை மெக்சிகோ அரசு மேற்கொண்டது. இதில், போதைப்பொருள் கடத்தல் மன்னன் எல் மென்சோ பலத்த காயமடைந்தான். உடனடியாக, மெக்சிகோவுக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்படும் போது அவன் உயிரிழந்தான். இந்தத் தகவலை அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, மெக்சிகோவில் வன்முறை வெடித்தது. ஜாலிஸ்கோ உள்பட பல்வேறு மாநிலங்களில், எல் மென்சோவின் ஆதராவாளர்கள் கார்களை தீயிட்டு கொளுத்தியும், சாலைகளில் துப்பாக்கிகளுடன் சென்று பொதுமக்களை மிரட்டியும் வருகின்றனர்.
மெக்சிகோவில் நிலைமையைக் கட்டுப்படுத்த மாநில அரசு நிர்வாகங்களுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக அதிபர் கிளாடியா ஷீன்பாம் தெரிவித்துள்ளார். இதனிடையே, மெக்சிகோவில் வன்முறை நிலவுவதால், ஜாலிஸ்கோ, தமுலிபாஸ், மைக்கோகன் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதேபோல, அமெரிக்கா, கனடாவும் தங்களின் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மேலும்
-
மாஸ்கோவை குறிவைத்து ட்ரோன்களால் உக்ரைன் தாக்குதல்; மாஸ்கோவில் 4 விமானநிலையங்கள் மூடல்
-
சட்ட விரோத மதமாற்றம்: உ.பி.,யில் பாதிரியார் கைது
-
பணம் கொடுத்தால் ஓட்டு வரும் என்று நினைப்பது தவறு: அண்ணாமலை
-
இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதை அறிவது எப்படி? இதோ இப்படி
-
தொகுதி பங்கீடு குறித்து கனிமொழியுடன் பேசியது என்ன? கிரிஷ் சோடங்கர் பதில்
-
வேணுகோபால் நேற்று கட்சிக்கு வந்தவர் : அவர் பிறக்கும்போதே நான் காங்கிரஸ்காரன் : கொந்தளிக்கிறார் மணிசங்கர் அய்யர்